​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லி கலவரத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ள நிலையில், கலவர பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியுள்ளது. குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே கடந்த ஞாயிறுன்ற டெல்லியில் கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டதாக...

தேசிய அறிவியல் தினம் கொண்டாடுவது ஏன் ??

இன்று தேசிய அறிவியல் தினம் உலகின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் எப்போதும் இன்றியமையாத தேவையாக உள்ளன. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் மனித சமூகத்தை அடுத்த பரிமாணத்திற்கு நகர்த்துகிறது. அப்படி நிறைய கண்டுபிடிப்புகள் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு துணையாக இருந்துள்ளன. இந்தியாவின் வளர்ச்சியிலும் அறிவியல்...

கவுன்சிலர் தாஹிர் ஹூசேனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் தாஹிர் ஹூசேன் வீட்டில் கலவரத்திற்குப் பயன்படுத்திய ஆசிட் பைகள், கற்கள், ஆயுதங்கள், துப்பாக்கிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன மேலும் உளவுத்துறை ஊழியர் அங்கித் சர்மாவை கொன்றதாக தாஹிர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கித் சர்மாவின்...

"மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் மராத்தி மொழி இனி கட்டாயம்"

மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மராத்தி மொழி கட்டாயம் என்பதற்கான மசோதா மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பள்ளிகளில் மராத்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில், வியாழக்கிழமை சட்டப்பேரவையில்...

மதுக்கடைகள் படிப்படியாக குறைப்பு: மது குடிப்போர் குறைந்துள்ளார்களா? - நீதிபதிகள் கேள்வி

மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பதாக கூறும் தமிழக அரசு, அதேநேரம், மது குடிப்போர்களின் எண்ணிக்கை எந்தளவுக்கு குறைந்துள்ளது என விளக்கம் அளிக்க தயாரா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. டாஸ்மாக் மதுக் கடைகள் இட மாற்றம் தொடர்பான வழக்குகள், தலைமை நீதிபதி...

சரவணபவன் மேலாளர் தற்கொலை..!

ஹோட்டல் சரவணன் பவன் நிர்வாகம் தகாத வார்த்தையில் திட்டியதாகக் கூறி காஞ்சிபுரம் பகுதி மேலாளர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில் ஊழியர்கள் பணிக்குச் செல்லாமல் கடை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காந்தி சாலை, பேருந்து நிலையம், சென்னை - பெங்களூர் சாலை...

சிறார் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியதில் மேலும் ஒருவர் கைது

சிறுவர் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியதாக மதுரையில் 3-வதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் ஆபாச பட விவகாரத்தில் ஏற்கனவே நேற்று மதுரை ஆரப்பாளையத்தில் லாரி புக்கிங் அலுவலகத்தில் பணியாற்றி வரும் குமார் மற்றும் சொக்கலிங்கம் என்ற செந்தில்குமார் ஆகிய இருவர்...

டெல்லி கலவரம் - பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு

வடகிழக்கு டெல்லியில் நேற்று இரவும் கலவரம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு இடையே, டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மோதல் வெடித்தது. இந்த மோதல்...

கடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடனுக்கு சிக்கன் தராததால் சிக்கனில் கொரோனா வைரஸ் இருப்பதாக  வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய சிறுவன் கைது செய்யப்பட்டார்.  நெய்வேலியில் உள்ள சகானா சிக்கன் சென்டர் பற்றி பலரது வாட்ஸ் அப்க்கு ஒரு தகவல் வந்தது. அதில் இங்கு...

2018 நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மாணவன், தந்தை கைது

2018ஆம் ஆண்டு சிபிஎஸ்இ நடத்திய நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 2ம்ஆண்டு படித்து வரும் மாணவனையும், உடந்தையாக இருந்த அவனுடைய தந்தையையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். 2019ம் ஆண்டு தேசிய தேர்வு மையம்...