​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புயல் பாதித்த மாவட்டங்களில் 216 நடமாடும் மருத்துவக் குழுக்கள் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்களும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் 216 நடமாடும் மருத்துவக் குழுக்கள் பாதிக்கப்பட்ட...

100 சதவீத மீனவர் உயிரிழப்பு தவிர்ப்பு - ஜெயக்குமார்

கஜா புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால் நூறு சதவீதம் மீனவர்கள் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் 333 மீனவ கிராமங்களின் படகுகள்...

கஜா புயலால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நகராக வேதாரண்யம் அறிவிப்பு

அதிகாலை 12.30 மணி முதல் 2.30 மணிக்குள் நாகை-வேதாரண்யம் இடையே தீவிர புயலாக கரை கடந்த கஜாவின் கோர தாண்டவத்தால் மிக கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத்...

கஜா புயலை 100 சதவீதம் பாதுகாப்பாக எதிர்கொண்டுள்ளோம் - ஆர்.பி.உதயகுமார்

கஜா புயலை தமிழக அரசு 100 சதவீதம் பாதுகாப்பாக எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மழையும், காற்றும் நின்றபிறகு, மீட்புப்பணிகள் முழுமையாக தொடங்கும் என தெரிவித்தார். வங்கக்கடலில் உருவான கஜா புயல், தமிழகத்தை நெருங்கி வந்ததை அடுத்து, நேற்று காலை 9.30...

கஜா புயல் காரணமாக 81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தஞ்சம்

கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கையாக 81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கஜா புயலால் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்ட இடங்களில் வசித்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அரசின் நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர்,...

கஜா புயல் எதிரொலியாக 17 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கஜா புயல் எதிரொலியாக மழை பெய்து வருவதால் நாகை, கடலூர், திருவாரூர் உள்பட 15 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தீவிர புயலானா கஜாவால்  கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்கள்...

நள்ளிரவு 12:00 - 2:30 மணியளவில் தீவிர புயல் கஜா கரையை கடந்தது

நள்ளிரவு 12.30 மணியளவில் கஜா புயல் நாகை-வேதாரண்யம் இடையே கரையைத் தொட்டு, அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்தது. இதனால் அப்பகுதிகளில் கனமழையுடன் பலத்த காற்று வீசி வருகிறது. கஜா புயல் நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவ்வப்போது...

கஜா புயலால் கடலோர மாவட்டங்களில் மழை, புயல் பாதிப்பு உள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள் முகாம்களில் தஞ்சம்

கஜா புயலால் பல ஊர்களில் அடைமழை தொடங்கி உள்ளது. இந்நிலையில் புயல் பாதிப்பு உள்ள ஊர்களைச் சேர்ந்த சுமார் 26,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.  கஜா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது....

கடலூர், நாகை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நாகை, கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வு...

நாகைக்கு வடகிழக்கே 180 கிலோமீட்டர் தொலைவில் கஜா புயல்

நாகைக்கு வடகிழக்கே 180 கிலோமீட்டர் தொலைவில்  தீவிர புயலாக மையம் கொண்டுள்ள கஜா, இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் நாகை அருகே கரையைக் கடக்க உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் மாலை 4 மணிக்கு வெளியிட்ட வானிலை...