​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பறிமுதல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட வாகன சோதனையில் இதுவரை 4...

போலி மதுபானம் தயாரித்து விற்பனை - பெண் உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலையில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்த பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை நகருக்கு உட்பட்ட கரியான்தெருவில் சிலர் வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபானம் தயாரிப்பதாக மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று...

ரூ.1 கோடி மதிப்பிலான 25,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

சத்தீஸ்கரில் இருந்து நாமக்கல் வழியாக டேங்கர் லாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கேரள மாநிலத்திற்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக, நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ராசம்பாளையம் சுங்கச்சாவடியில் டேங்கர்...

மதுவிலக்கு போலீசார் பிடித்த 3,885 லிட்டர் எரிசாராயம் அழிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 9 மாதங்களில் பிடிபட்ட எரிசாராயத்தை, போலீசார் கீழே கொட்டி, அதை தீயிட்டு கொளுத்தினர். விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு போலீசார், ஜனவரி முதல் செப்டம்பர் வரை பிடித்த எரிசாராயத்தை அழிக்குமாறு, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, 111 கேன்களில்...

செஞ்சி அருகே 13,580 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 ஆயிரத்து 580 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. அவலூர்பேட்டை அடுத்த புதுகாலனி அருகே உள்ள தமிழ்நகர் பகுதியில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை...

செய்யாறு அருகே 490 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 490 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். செய்யாறு பகுதியை அடுத்த பாப்பாந்தாங்கல் கிராமத்தில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நடத்திய சோதனையில்,...

வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 780 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 780 லிட்டர் எரி சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  வெங்கட்ராயன்பேட்டை, புளியரம்பாக்கம், காழியூர், அத்தி உள்ளிட்ட கிராமங்களில் பாக்கெட்டுகளில் எரிசாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, காழியூர் கிராமத்தில் படவேட்டான்...

கிருஷ்ணகிரியில் வீட்டிற்குள் போலி மதுபானம் தயாரித்தவர் கைது

கிருஷ்ணகிரி : வீட்டில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்த மாதேஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாதேஷின் வீட்டை சோதனையிட்டதில் சுமார் 200 லிட்டர் எரிசாராயம் போலி மதுபாட்டில்கள் மற்றும் போலியான ஸ்டிக்கர்கள், போன்றவற்றை...