​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

21 தொழில் திட்டங்களுக்கு அனுமதி - 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில், 21 தொழில் திட்டங்களுக்கு, முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 8 ஆயிரத்து 120 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் கிடைக்கப்பெற்று, 16 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு, தொழில் முதலீடுகளை ஈர்க்க,...

"இடைத்தேர்தல் வெற்றி... உண்மைக்கு கிடைத்த வெற்றி" - முதலமைச்சர் பெருமிதம்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி, உண்மைக்கு கிடைத்த மகத்தான வெற்றி என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்திருக்கிறார். வருகிற 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், இந்த வெற்றித் தொடரும் என்றும் கூறியிருக்கிறார்.  இரு தொகுதிகள் இடைத்தேர்தலில், அ.தி.மு.க....

இடைதேர்தல் வெற்றி அதிமுகவுக்கு தீபாவளி பரிசாக அமையும் - அமைச்சர் செங்கோட்டையன்

விழுப்புரத்தில் அதிமுகவின் 48ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அமைச்சர்கள் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக, அமைச்சர்கள் செங்கோட்டையன் உடுமலை ராதாகிருஷ்ணன், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், வீரமணி, கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், சேவூர் ராமச்சந்திரன், துரைக்கண்ணு, பெஞ்சமின், நிலோபர்...

2,500 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

கடலூரில் 2 ஆயிரத்து 500 பெண்களுக்கு அமைச்சர் எம்.சி சம்பத் தாலிக்கு தங்கம் வழங்கினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அன்பு செல்வன் தலைமையில்தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், 2 ஆயிரத்து...

இராமசாமி படையாச்சியாரின் 102வது பிறந்தநாள் - தமிழக அமைச்சர்கள் மரியாதை

இராமசாமி படையாச்சியாரின் 102வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சமூக நீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான இராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு...

இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக கூறுவது தவறான கருத்து - அமைச்சர் MC சம்பத்

இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக கூறுவது தவறான கருத்து என்றும் உலகளாவிய அளவிலேயே பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில்தான் இருப்பதாகவும் தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்திருக்கிறார். நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் உள்ள புனித சவேரியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற...

தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு நடவடிக்கை - அமைச்சர் எம்.சி.சம்பத்

தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து சென்னை - குமரி தொழில் மேம்பாட்டுச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு மண்டலங்களாக ஒருங்கிணைந்த தொழில்...

மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் கூட்டம்

வர்த்தக வாரியத்தின் இந்திய அளவிலான உயர்மட்டக் கூட்டம் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி மற்றும் சோம் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. டெல்லியில் உள்ள அசோக் ஹோட்டலில் நடந்த...

கழிவு நீர் மறுசுழற்சி மையத்தை பார்வையிட்டார் முதலமைச்சர்

அமெரிக்காவில்  லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் அமைந்துள்ள கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி லண்டன், அமெரிக்கா...

டெஸ்லா மின்சாரக் கார் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அமெரிக்காவில் டெஸ்லா மின்சாரக் கார் தொழிற்சாலையை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அந்நிறுவனம்  தொழிற்சாலையை தொடங்க அழைப்பு விடுத்தார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா கார் நிறுவனம் மிகப்பெரிய எலக்ட்ரானிக் கார் உற்பத்தி நிறுவனமாகும். டெஸ்லா கார் மின்சாரக் கார் உற்பத்தியில்...