​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஏ.கே.47, வெடிகுண்டுகள் வைத்திருந்ததாக தேடப்பட்ட பீகார் எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

பீகாரில் ஏ.கே. 47 துப்பாக்கி, வெடிபொருட்கள் வைத்திருந்ததாகத் தேடப்பட்டு வந்த சுயேச்சை எம்எல்ஏ டெல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார். மொகாமா சட்டப்பேரவை தொகுதியில் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏவாக 2 முறை இருந்த ஆனந்த் சிங் என்பவர், நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அக்கட்சியில்...

உத்திரப்பிரதேசத்தின் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு விரிவாக்கம்

உத்திரப்பிரதேசத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், 23 எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் 6 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சராக...

மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் காலமானார்

மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பாபுலால் கவுர் காலமானார். 89 வயதான பாபுலால் கவுர் வயது முதிர்வால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவ்வபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.கவை சேர்ந்த இவர் 2004 முதல்...

சவுடு மண் அள்ள சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெற வேண்டுமா? - நீதிபதிகள் கேள்வி

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் சார்ந்த ஆவணங்களுடன், மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ சரவணன் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டத்தில் குடிமராமத்து எனும் பெயரில் சட்டவிரோதமாக சவுடு மண்...

கர்நாடகாவில் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு..!

கர்நாடகத்தின் முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்று 25 நாட்களாகி விட்ட நிலையில், அவரது தலைமையிலான அமைச்சரவை இன்று முதல் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, முதலமைச்சராக இருந்த குமாரசாமி பதவி இழந்தார். இதை...

கர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம்..!

பாஜக தலைவர் அமித்ஷா அனுமதி அளித்ததை தொடர்ந்து, கர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அம்மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, கடந்த மாதம் 26 ஆம் தேதி எடியூரப்பா முதலமைச்சராக...

கர்நாடகாவில் விஐபி.க்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

கர்நாடகாவில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு, அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.  கர்நாடகாவில், அண்மையில் ஆட்சி மாற்றம் நடைபெற்று, எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, பெங்களூரு காவல் ஆணையராக பாஸ்கர் ராவ் நியமிக்கப்பட்டார். இவர், பெங்களூரு காவல் ஆணையர் பதவிக்கு...

பிரதமர் மோடியுடன் குல்தீப் செங்கார் புகைப்பட விளம்பரம் , பாஜக தலைவர்கள் கருத்துக் கூறுவார்களா? - பிரியங்கா கேள்வி

பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏ குல்தீப் செங்கார் புகைப்படம் இருக்கும் விளம்பரம் குறித்து பாஜகவின் பெரிய தலைவர்கள் கருத்து கூறுவார்களா? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சிறுமியை பலாத்காரம் செய்ததோடு, அவரது தந்தையை கொலை...

தென்காசி தனி மாவட்ட கருத்து கேட்பு கூட்டம்

தென்காசியை தனி மாவட்டமாக பிரிப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம், நெல்லையில் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய்...

பீகார் எம்.எல்.ஏ. வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

பீகார் மாநிலத்தில் எம்.எல்.ஏ. ஒருவரின் வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மொகாமா சட்டப்பேரவை தொகுதியில் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏவாக இருந்த ஆனந்த் சிங் என்பவர், முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி...