​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி சென்றதால் கெட்ட சகுனம் - குமாரசாமி

இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி சென்றதால் ஏற்பட்ட கெட்ட சகுனமே சந்திராயன் 2 திட்டத்தின் பின்னடைவுக்கு காரணம் என்று கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் திட்டத்துக்கு 2008 - 2009-ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக்...

புதிய வாகன சட்டத்தின்படி வசூலிக்கப்படும் அபராதத் தொகை குறைப்பு

குஜராத்தை பின்பற்றி கர்நாடகத்திலும் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு வசூலிக்கப்படும் அபராதத் தொகை வெகுவாக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மோட்டார் வாகன சட்டத்தை திருத்தியுள்ள மத்திய அரசு, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை பத்து மடங்குக்கும் மேலாக...

கர்நாடகாவில் மேலும் 2 துணை முதலமைச்சர்களை நியமிக்க திட்டம்

கர்நாடக மாநிலத்தில் தற்போது மூன்று துணை முதலமைச்சர்கள் உள்ள நிலையில் மேலும் 2 பேர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக மாநிலத்தில் தற்போது கோவிந்த் கர்ஜோல், லட்சுமண் சவாடி, அஸ்வத் நாராயண் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் முறையே...

சரித்திரம் படைக்குமா? சந்திரயான் 2

நிலவின் இரு பள்ளங்களுக்கு இடையே உள்ள சமதளப் பரப்பில் சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர், நாளை அதிகாலை தரை இறக்கப்படுகிறது. இந்தியா நிகழ்த்தவுள்ள வரலாற்றுச் சாதனையை இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பார்ப்பதற்கு பிரதமர் நரேந்திரமோடி வரவுள்ளதால், பெங்களூருவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  நிலவைச் சுற்றி...

சிவக்குமார் கைது கர்நாடகத்தில் பதற்றம்

கர்நாடக காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரை, பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது. இதைக் கண்டித்து கர்நாடகாவில் நடைபெற்று வரும் போராட்டங்களில் ஆங்காங்கே வன்முறை வெடித்தது. 2017ஆம் ஆண்டில் கர்நாடகத்தின் எரிசக்தி துறை அமைச்சராக டி.கே.சிவக்குமார் இருந்த போது, வரி...

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் -சிபிஐ விசாரணை

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகத்தின் முக்கியத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். முதலமைச்சர் எடியூரப்பா பரிந்துரையை அடுத்து இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில போலீசார் திரட்டிய அனைத்து...

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் - கர்நாடக அரசின் பரிந்துரையை ஏற்று வழக்கு பதிவு செய்தது சி.பி.ஐ.

கர்நாடகாவில் அரசியல் தலைவர்களின் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. அந்த கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் குமாரசாமி...

ஆபாச படம் பார்த்த சர்ச்சையில் சிக்கியவருக்கு துணை முதலமைச்சர் பதவி

கர்நாடகாவில் சட்டசபைக்குள் ஆபாச படம் பார்த்தவருக்கு, துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் லக்ஷ்மன் சவதி, கோவிந் கர்ஜோல், மற்றும் அஷ்வந்த் நாராயணன் ஆகிய 3 பேர் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த மூன்று பேரில் லஷ்க்மன் சவதி என்பவர் கடந்த 2012...

கர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் டெல்லி பயணம்

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களின் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரணைக்கு ஏற்றுள்ளது. இதையடுத்து, பதவி பறிக்கப்பட்ட எம்.எல்,ஏக்கள் இன்று மாலை விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர். தங்கள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துவதுடன், பாஜக தலைவர் அமித் ஷாவையும் சந்திக்க...

கர்நாடகாவில் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு..!

கர்நாடகத்தின் முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்று 25 நாட்களாகி விட்ட நிலையில், அவரது தலைமையிலான அமைச்சரவை இன்று முதல் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, முதலமைச்சராக இருந்த குமாரசாமி பதவி இழந்தார். இதை...