​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் பயன்படுத்தும் பொதுவழி பாதையிலிருந்து, சிறப்பு வழி பாதைக்கு மாற்றம்

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுநாள் வரை பயன்படுத்தி வந்த பொதுவழிக்குப் பதில் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் உள்ளிட்டோர் செல்லும் சிறப்பு வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும்போது விமான...

சுகாதாரத்துறையில் 1008 பேருக்கு பணிநியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்

சுகாதாரத்துறையில் நாட்டிலேயே சிறந்த கட்டமைப்புடன் தமிழகம் விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 242 உதவி மருத்துவர்கள், 337 செவிலியர்கள், 308 மருந்தாளுநர்கள், 90நுண்கதிர்வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 21சுகாதாரப் புள்ளியியலாளர்கள் தேர்வு...

குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணை முழுமை பெற அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்து, சி.பி.ஐ விசாரணை முழுமையாக நடைபெற தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் விசாரணை நடைபெறவேண்டும்...

ஆரோக்கியமற்ற முன்மாதிரிகளை ஆளுநர் ஏற்படுத்தி வருவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆரோக்கியமற்ற முன்மாதிரிகளை தமிழக ஆளுநர் ஏற்படுத்தி வருவதாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  அவர் விடுத்த அறிக்கையில், எடப்பாடி பழனிசாமி அரசு மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரமில்லை என்று, ஆங்கில நாளேட்டுக்கு ஆளுநர் பேட்டி அளித்திருப்பது ஆச்சரியம் தருவதாக கூறியுள்ளார். அரசு...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பட்ஜெட் மீதான மாநியக் கோரிக்கை ஆலோசனைக் கூட்டம்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொழில்துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட் மீதான மாநிய கோரிக்கை விவாதம் வரும் ஜூன் முதல் வாரத்தில் சட்டப்பேரவையில் நடைபெற உள்ளதால் ஒவ்வொரு துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் தலைமையில்...

நிர்மலா தேவி விவகாரத்தில் மௌனமாக இருந்தால் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகி விடும் என்பதாலேயே விளக்கம் அளித்தேன் - ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் பரபரப்பான பேட்டி

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மௌனமாக இருந்தால் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகி விடும் என்பதாலேயே விளக்கம் அளித்ததாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பன்வாரிலால் புரோஹித் அளித்துள்ள பேட்டியில், நிர்மலாதேவி விவகாரத்தில்  தமது பெயர் இழுக்கப்பட்டதால் விளக்கம் அளித்ததாக...

டிடிவி தினகரன் எதேச்சதிகாரத்துடன் நடப்பதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றச்சாட்டு, காழ்ப்புணர்ச்சியில் திவாகரன் பேசுவதாக தினகரன் பதிலடி

எதேச்சதிகாரத்துடன் டி.டி.வி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நடத்தி வருவதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் ஜெயலலிதா, சசிகலா, பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஏமாற்றிய டி.டி.வி தினகரன் தற்போது தொண்டர்களை ஏமாற்றி வருவதாகவும் திவாகரன் புகார்...

அசாமில் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவு

அசாம் மாநிலத்தில் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அசாம் மாநிலம் இடுலி மற்றும் கபாங் இடையிலான பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது,...

தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் 13 பல்கலைக்கழகங்களின் தரவரிசையை மேம்படுத்த நடவடிக்கை

தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 13 பல்கலைக்கழகங்களின் மதிப்பீடு மற்றும் தரவரிசை தொடர்பான பணிகளை கட்டணமின்றி மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது. மாநில உயர்கல்வி மன்றத்தின் சார்பாக அதன் துணை தலைவர் பொறுப்பு வகிக்கும் சுனீல்பாலீவால்,...

கூட்டுறவுத்துறை செயல்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது

கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக ஜூன் முதல் வாரத்தில் சட்டப்பேரவை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஒட்டி, துறை வாரியாக முதலமைச்சர் எடப்பாடி...