​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம்

ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தில் உருவான நூல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.  நீட் போன்ற போட்டித் தேர்வுகளை தமிழக மாணவ மாணவிகள் அச்சமின்றி எதிர்கொள்ளக் கூடிய வகையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள்...

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் வரவேற்றார்

தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் வரவேற்றனர்.  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். விமானப் படை சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த...

சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை நம்பி மாணவர்கள் திசை மாறிவிடக்கூடாது - முதலமைச்சர் பழனிசாமி

சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை நம்பி மாணவர்கள் திசை மாறிவிடக்கூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். சென்னை பச்சையப்பன் கல்லூரியின் 175-வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்....

நூறு ஸ்டாலின் வந்தாலும், அதிமுகவை தொடக்கூட முடியாது - முதலமைச்சர் பழனிசாமி

காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்றும், நூறு ஸ்டாலின் வந்தாலும், அதிமுகவை உடைக்க முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற புரட்சி பாரதம் கட்சியின் 40வது ஆண்டு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை...

காவிரி விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து

காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புரட்சி பாரதம் கட்சியின் 40 -வது ஆண்டு விழாவில் பேசிய அவர், இதனை கூறினார். காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைய காக்க தமிழக...

முதலமைச்சர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிக்கு கால்கோள் விழா - அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2 வது குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றை தொடங்கி வைப்பதற்காக வரும் 11ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் முதலமைச்ச் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார். இந்நிகழ்ச்சிக்கான கால்கோள் நடும் நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்...

உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு இன்று மீண்டும் விசாரணை

காவிரி நீர்ப் பங்கீட்டுத் திட்டத்தை வரைவு செய்ய மேலும் இரண்டு வார கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.  காவிரி நதிநீர் பங்கீட்டுத் திட்டத்தை வகுக்க கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்...

காவிரி பிரச்சனையில் பிரதமரை தனியாக சந்திப்பது முறையல்ல - முதலமைச்சர் பழனிசாமி

அனைத்துக்கட்சியினரும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட முடிவின் படி காவிரி பிரச்சனை தொடர்பாக பிரதமரை தனியாக சென்று பார்ப்பது சரியாக இருக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.  டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது...

பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், காவிரி குறித்து பேச்சு : முதலமைச்சர் பழனிசாமி

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச வாய்ப்புக் கிடைத்தால், காவிரி விவகாரம் குறித்து வலியுறுத்தவுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள், வரும் அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ள மத்திய அரசு,...

தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனமுடைந்த பள்ளி மாணவன் ரயில் பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை

தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனமுடைந்த 12ஆம் வகுப்பு மாணவன் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவிலை அடுத்த குருக்கள்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாடசாமி தினமும் குடித்துவிட்டு...