​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மசூதிகளில் அகமதியா முஸ்லீம்கள் அனுமதி என தீர்ப்பு கூற முடியுமா? - எச்.ராஜா கேள்வி

சபரிமலையில் அனைத்து பெண்களும் செல்லலாம் என கூறிய தீர்ப்பு குறித்து பேசிய ராஜா, அனைத்து மசூதிகளிலும் அகமதியா முஸ்லீம்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என தீர்ப்பு கூற முடியுமா என கேள்வி எழுப்பினார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில்...

தமிழ் ஒரு இனிய மொழி, ஆனால் தாம் இன்னும் முழுமையாக கற்கவில்லை என ஆளுநர் பேச்சு

தமிழ் ஒரு இனிய மொழி என்றும், ஆனால் அதை தாம் இன்னும் முழுமையாக கற்கவில்லை என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் கலந்துக் கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்....

சின்மயி கூறிய புகாரை சுட்டிக் காட்டி வைரமுத்து வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக உறங்கக் கூடாது என எச்.ராஜா பேட்டி

வைரமுத்து வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக உறங்கக் கூடாது என்று பா.ஜ.க. தேசியச் செயலர் எச்.ராஜா சாடியுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மதுரை மேலமாசி வீதி சந்திப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட...

உணர்ச்சிவசப்பட்டு வாய் தவறி நீதிமன்றத்தை அவதூறாக பேசிவிட்டேன் - ஹெச்.ராஜா

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய புகாரில், பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்த ஹெச்.ராஜா, சென்னை உயர்நீதிமன்றம் குறித்துத் தரக்குறைவாகப் பேசிய காட்சி...

கோவில்களை பராமரிப்பதில் மெத்தனம், இந்து அறநிலையத்துறை மீது எச்.ராஜா குற்றச்சாட்டு

இந்து சமய அறநிலையத்துறை, கோவில்களை  பராமரிப்பதில் மெத்தனம் காட்டி வருவதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் கோவில் குளத்தில் அருகில் உள்ள குடியிருப்புகளின் கழிவு நீர் கலப்பதாக புகார் எழுந்த நிலையில் அதிகாரிகளை அழைத்து வந்து அதற்கு...

நீதிமன்ற வழக்குத் தொடர ஏன் அனுமதியளிக்க கூடாது? எச்.ராஜா பதிலளிக்க தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஏன் அனுமதியளிக்க கூடாது என்ற மனுவிற்கு, வருகிற 24ஆம் தேதிக்குள் பதிலளிக்க, பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவுக்கு, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக புதன்கிழமையன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், அவரது...

நீதிமன்றத்துக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக தானாக வழக்கு தொடர சி.டி.செல்வம் அமர்வுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா தரப்பில் முறையீடு

நீதிமன்றத்துக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக தானாக முன்வந்து வழக்கு தொடர உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார் அமர்வுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.  நீதிமன்றம், காவல்துறைக்கு எதிரான எச்.ராஜாவின் கருத்துக்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில்...

தந்தை பெரியார் சிலை அவமதிப்புக்கு காரணமானவர் ஹெச்.ராஜா - வைகோ

தந்தை பெரியார் சிலை அவமதிப்புக்கு காரணமானவர் ஹெச்.ராஜா என்று கூறியுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவரை கைது செய்ய வலியுறுத்தியுள்ளார். தமிழக மக்களுக்கு தன்மானத்தையும், பகுத்தறிவையும் ஊட்டி, இந்திய உபகண்டத்துக்கே சமூக நீதியின் வெளிச்சத்தை வழங்கிய அறிவாசான் தந்தை பெரியாரின் சிலையை உடைக்கவேண்டும்...

நாகரீகத்தோடு நடக்காவிட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் கருணாசின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு முதலமைச்சர் பதில்

பொது வாழ்வுக்கு வந்து விட்டால் நாகரீகத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் எம்எல்ஏ கருணாசின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது....

ஹெச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய, ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர்கள் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர்கள் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ராஜாவின் பேச்சு...