​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தென் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் தேர்தல் ஆணையர்

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நாளை முதல் 3 நாட்களுக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த மாநில தேர்தல் ஆணையர்...

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்- மருத்துவர்கள் கோரிக்கை

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக ஏற்கனவே தெரிவித்திருந்த படி அரசு மருத்துவர்களை, தமிழக அரசு அழைத்து பேச வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தினர், சமீபத்தில் 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி...

உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட 16ம் தேதி முதல் விருப்பமனு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பா.ஜ.க.வினர், வரும் 16ம் தேதி முதல், விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழக உள்ளாட்சித் தேர்தல் மற்றும், அக்கட்சியின் அமைப்பு தேர்தலுக்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டம்...

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மனுநீதி முகாம்களில் கலந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யும் பணிகள் தீவிரம்

பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை தீர்மானிக்கும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலின் போது பணியாற்றக்கூடிய 6 லட்சத்து 50 ஆயிரம் தேர்தல் பணியாளர்களின் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி...

திமுக தலைவர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் சந்தித்து பேசினர். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள்...

உள்ளாட்சித் தேர்தல்... அதிமுக விருப்பமனு அறிவிப்பு...

உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், வருகிற 15 மற்றும் 16ஆம் தேதிகளில், விருப்ப மனுக்களை பெற்று அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி பதவிகள் வாரியாக விருப்ப மனுக் கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிமுக சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர்...

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுகங்கள்... ஆட்சியர்களுக்கு அறிவுரை

தமிழகத்தில் எந்நேரம் வேண்டுமானாலும் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்பதால், அதற்கான பணிகளை முடித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டுமென்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர்...

தமிழக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.  தமிழகத்தில் 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இன்னும்...

7 நிறுவனங்களை செயல்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் ஒப்புதல்

7 நிறுவனங்களை செயல்படுத்தவும்,  விரிவாக்கம் செய்யவும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும், தலைமை...