​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸ்பெயினில் குளோரியா புயலின் தாக்கத்திற்கு 4 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினில் குளோரியா புயலின் தாக்கத்திற்கு 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புயலின் தாக்கத்தினால் சூறாவளிக்காற்றுடன் சேர்ந்து கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் 30க்கும் மேற்பட்ட மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் வாலன்சியாவில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரை நகரமான ஜாவியா...

சீனாவில் இருந்து பரவி வரும் கரோனா வைரஸ் - இந்தியாவில் முன் எச்சரிக்கை எற்பாடு

கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறும் அனைத்து மாநிலங்களையும் மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. சீனாவில் மீண்டும் பரவி வரும் கரோனா வைரசால் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீனாவில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா...

சாலையை கடக்க முயன்ற தாய் - 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு

மாமல்லபுரம் அருகே, சாலையை கடக்க முயன்ற தாயும்,4 வயது மகனும் கார் மோதி காயம் அடைந்த நிலையில் காப்பாற்ற ஆளின்றி உயிரிழந்தனர். புதிய கல்பாக்கத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தியின் மனைவி திலகவதி. இவர் எல்கேஜி மாணவனான 4 வயது மகன் திருமுருகனை கோவளம்...

இமாசல பிரதேசத்தில் கிராமம் ஒன்றின் மீது விழுந்த பனிக்கட்டிகள்

இமாசல பிரதேச மாநில கிராமம் ஒன்றின் மீது மலையிலிருந்து பனிக்கட்டிகள் சரிந்து விழும் வீடியோ வெளியாகியுள்ளது.  கின்னெளர் மாவட்டம் ரிப்பா கிராமம், இமயமலையையொட்டிய பகுதியில் அமைந்துள்ளது. நேற்று அக்கிராமத்தின் மீது மலையில் இருந்து பனிக்கட்டிகள் சரிந்து விழுந்து மூடின. இதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள்...

விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திட முதலமைச்சர் வேண்டுகோள்

சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்களை தவிர்த்திடவும், விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திடவும், அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 31வது சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பொதுமக்களிடையே விழிப்புணர்வை...

கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர், 2 கார்களில் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் சென்றுள்ளார். அங்கு சாமிதரிசனம் செய்தவர்கள்,...

காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..

திருமணமான 4 மாதத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சித்தேரியை சேர்ந்த பழனிவேல் என்பவர், ராஜேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். ராஜேஸ்வரி கர்ப்பம்...

பனிச்சரிவில் சிக்கிய 12 வயது சிறுமி 18 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பனிச்சரிவில் 100 பேர் உயிரிழந்த நிலையில் 12 வயதுச் சிறுமி 18 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் இங்குள்ள நீலம் பள்ளத்தாக்கில் மட்டும் 74 பேர் உயிரிழந்துள்ளனர். பனிச்சரிவுக்கிடையே ஷமீனா என்ற...

டெல்லியில் காலணி தயாரிப்பு தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து

டெல்லியில் காலணி தயாரிப்பு தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. வடமேற்கு டெல்லியிலுள்ள லாரன்ஸ் சாலை பகுதியில் இயங்கி வரும் அந்த தொழிற்சாலையில் காலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்தவுடன் 26 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். தீவிபத்தில்...

கார் டயர் வெடித்ததால் பேருந்தின் மீது மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், தனியார் பேருந்தின் மீது மோதி அடியில் சிக்கிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து சேலத்தை நோக்கிப் புறப்பட்ட கார், உளுந்தூர்பேட்டை அடுத்த வண்டிப்பாளையத்தில் உள்ள நான்கு...