​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

4 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை, தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகள், நீர் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து 12 வாரங்களுக்குள் அகற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் மனுக்கள்...

சவுடு மணல் அள்ளப்படுவதாக புகார் - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் சவுடு, களிமண் எடுக்க தடை விதிக்கக்கோரிய வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  நெல்லையைச் சேர்ந்த சுடலைக்கண்ணு தொடர்ந்த வழக்கில், ஏரல், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் உள்ள தனியார் பட்டா நிலங்கள்...

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் வழக்கில், தகவல்களை சேகரித்து சமர்ப்பிக்க அரசு வழக்கறிஞர்களுக்கு ஆணை

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் சேதமடைந்த சிலைகளை மாற்றி, புதிய சிலைகள் அமைக்கக் கோரிய வழக்கில், உரிய தகவல்களை சேகரித்து அரசு வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாதாகோட்டையைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில், பிரகதீஸ்வரர் கோயிலில் சேதமடைந்த அஷ்ட...

மாவோயிஸ்ட் மணிவாசகம் உடலை பிணவறையில் பாதுகாக்க உத்தரவு

கேரள போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை சேலம் அரசு மருத்துவமனை, பிணவறையில் பாதுகாக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண்பதற்காக, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது மனைவி மற்றும் சகோதரி கலா ஆகியோருக்கு 30 நாள் பரோல்...

மனமகிழ்மன்றத்தில் திடீர் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே செயல்படும் மனமகிழ்மன்றத்தில் விதிமீறல் உள்ளதா? என்று நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஷாஜகான் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்...

வழிகாட்டுதல்களை பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை - தமிழக டிஜிபிக்கு அறிவுறுத்தல்

வழக்கு ஆவணங்களை ஒப்படைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை பின்பற்றாத விசாரணை அதிகாரி மற்றும் காவல் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக டிஜிபியை  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த மருந்து விற்பனை கடை உரிமையாளர் ஜனார்த்தனன் என்பவர் கடத்தப்பட்ட வழக்கில் கைது...

மனமகிழ் மன்றங்களில் ஆய்வு நடத்த ஆணை

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அனைத்து மனமகிழ் மன்றங்களிலும், முன்னறிவிப்பின்றி சோதனை நடத்த கலால்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மனமகிழ்மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தேனியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதில்...

சவுடு மண் எடுக்க தடை விதிக்கப்பட்ட பொதுநல வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்காக மாற்றி உத்தரவு

13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க தடை விதிக்கப்பட்ட பொதுநல வழக்கை, நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்காக மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைக்குட்டத்தைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,...

சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு நடைமுறையை அமல்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

அனைத்து வழக்குகளிலும் சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, 2 மாதங்களாக குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்ததில், சாட்சிகள் பிறழ்சாட்சியம் அளித்ததால்...

சவுடு மண் எடுக்க தடை: வழக்கை திரும்பப்பெறும் மனுதாரர்... நீதிபதிகள் சந்தேகம்

13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க தடை விதிக்கப்பட காரணமாக இருந்த மனுதாரர் திடீரென மனுவை திரும்பப் பெறுவதாக கூறியதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் பல்வேறு சந்தேகங்களைக் கூறி கேள்விகளை எழுப்பினர். மனுதாரர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டனர்.  ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைக்குட்டத்தைச் சேர்ந்த...