​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாயமானவர்களில் மேலும் ஒருவர் உடல் மீட்பு

கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் நடந்த படகு விபத்தில் மாயமானவர்களில் மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமாநல்லூர் என்ற தீவு கிராமத்தில் கடந்த 11 ஆம் தேதி நடந்த கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று விட்டு பக்தர்கள் படகு...

ஐஐடி முன்னாள் பேராசிரியரின் மனைவியின் அழுகிய உடல் மீட்பு

சென்னை ஐஐடி முன்னாள் பேராசிரியர் ஒருவரது வீட்டில் இருந்து அவரது மனைவியின் அழுகிய சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், மனநிலை பாதிக்கப்பட்டவராகக் காணப்படும் பேராசியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொட்டிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ராஜகோபால், செவ்வாய்கிழமை இரவு தனது மனைவி கல்யாணிக்கு...

விசைப்படகு மீனவர்களின் வலையில் சிக்கி உயிரிழந்த, நாட்டுப்படகு மீனவரின் உடல் மீட்பு

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களின் வலையில் சிக்கி உயிரிழந்த, மீனவரின் உடல் 2 நாட்களுக்கு பின்னர் இன்று மீட்கப்பட்டது. லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த சந்தீஸ்டன் என்ற மீனவர், 2 நாட்களுக்கு முன்பு நாட்டுப்படகில் சங்கு குளிக்க சென்ற நிலையில், விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக இறக்கிய...

கிணற்றில் மிதந்த திருநங்கையின் உடல் மீட்பு

நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே கிணற்றில் இருந்து திருநங்கை ஒருவரின் உடலை போலீசார் மீட்டனர். நெல்லை மாவட்டம் குருக்கள்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மூன்றாம் பாலினத்தவர்களோடு இணைந்து நவீனா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு அவர்களுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 13ந்தேதி வீட்டை விட்டு...

ஆரோவில் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் இளம்பெண் உடல் மீட்பு

புதுச்சேரி ஆரோவில் அருகே எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொம்மையார்பாளையத்தில் இருந்து ஆரோவில் செல்லும் வழியில் ராஜேஸ்வரி கலை அறிவியல் கல்லூரி அருகே 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் எரிந்து கருகிய நிலையில்...

மேகாலயா மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெள்ளத்தில் சிக்கியவர்களில் ஒருவரின் உடல் மீட்பு

மேகாலயா மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெள்ளத்தில் சிக்கியவர்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேற்கு ஜெய்ந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள இந்தச் சுரங்கத்துக்குள் அருகில் உள்ள ஒரு ஆற்றின் வெள்ளம் சூழ்ந்ததில் 15 பேர் சிக்கிக் கொண்டனர். தேசிய மற்றும் மாநில பேரிடர்...

சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெள்ளத்தில் சிக்கிய 15 பேரில் ஒருவரின் உடல் மீட்பு

மேகாலயா மாநிலத்தில் வெள்ளம் சூழ்ந்த சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் இருந்து ஒரு உடலை மீட்பு குழுவினர் மீட்டனர். மேற்கு ஜெய்ந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் ஆறு ஒன்றின் அருகே உரிய அனுமதிகள் இன்றி சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வந்தது. கடந்த டிசம்பர் 13-ஆம்...

வேலூர் அருகே சதுப்பேரியில், நீரில் மிதந்த நிலையில் செவிலியர் உடல் மீட்பு

வேலூர் அருகே சதுப்பேரியில், நீரில் மூழ்கிய நிலையில், செவிலியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மரணத்தில் சந்தேகம் எழுந்திருப்பதால், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். வேலூர் கீழ்மெனுவூர், பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் கதிரேசன் என்பவரது மனைவி அனிதா, CMC மருத்துவமனையில்...

தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் மாயமான மீனவர்களில் ஒருவரது உடல் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் மாயமான மீனவர்களில் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.  இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சுஜின், சுனில் ஆகியோர், தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் தங்களது படகை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க முயன்றனர். அப்போது கழிமுகத்தில் வெள்ளபெருக்கு அதிகமானதால் ...

கப்பல் மோதி விசைப்படகு கவிழ்ந்த விபத்தில் 5வது மீனவரின் உடல் மீட்பு

கொச்சி கடல் பகுதியில் கப்பல் மோதி கன்னியாகுமரி மீனவர்கள் சென்ற விசைப்படகு கவிழ்ந்த விபத்தில் ஐந்தாவது மீனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ராமன் துறையைச் சேர்ந்த ஏசு பாலன் என்பவரது படகில் அவர் உள்பட 14 பேர் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றனர். கொச்சி கடல்...