​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத மத்திய அமைச்சரவைச் செயலாளர், நீர்வள அமைச்சகச் செயலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.காவிரி வழக்கில் பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த...

மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தமிழக அரசு சார்பில் இன்று தொடரப்படும் எனத் தகவல்

காவிரி விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு தாக்கல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அ.தி.மு.க. சார்பில் ஏப்.3ல் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்து வரும் 3 ஆம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலத்திற்குள் அமைக்க...

திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றம் - அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தத் தீர்மானம்

காவிரிப் பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விவாதிக்கத் திமுக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத நிலையில் திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம் சென்னை அண்ணா...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு - அமைச்சர் ஜெயக்குமார்

 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பில் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டிருந்த 6 வார கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. தமிழக அரசின் அடுத்த...

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக செயற்குழுக் கூட்டம் - காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முடிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தவறிய நிலையில், திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை  வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தமது...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு என தகவல்

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கப்படாததால் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக  பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், தமிழகத்துக்கு 177டிஎம்சி...

காவிரி விவகாரம் அடுத்து என்ன? முதலமைச்சர் ஆலோசனை

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு தவறியுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். காவிரி விவகாரம் தொடர்பாக  பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், தமிழகத்துக்கு 177டிஎம்சி தண்ணீரைக் கர்நாடகம் வழங்க வேண்டும் என்றும், இந்த நீர்ப்பங்கீட்டைச்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்ப்பில் குறிப்பிடவில்லை - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில்தான் மேலாண்மை வாரியம் அமைக்க கூறியிருப்பதாகவும், தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் நதிநீர் பங்கீட்டுக்கான...

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்கும் - ரஜினிகாந்த்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்கும் என  நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. காவிரி விவகாரம் பற்றியோ, தீர்ப்பு பற்றியோ நடிகர் ரஜினிகாந்த் இதுவரை...