​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிரியா எல்லையில் துருக்கி தாக்குதல்

சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான் வழியாகவும் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால், பதற்றம் நிலவுகிறது.  துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்துக்கள். குர்து...

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. பேரல் விலை 58 புள்ளி 73 டாலராக உயர்ந்துள்ளது. ஈராக் மற்றும் ஈக்குவேடரில் உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளால் உற்பத்தி குறைந்திருப்பதால் சந்தையில் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் சுமுக முடிவு...

ஈரானுடன் பதற்றத்தை தணிக்க உதவுமாறு கேட்டுக்கொண்ட சவுதி அரேபியா

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தாக்குதலையடுத்து நிலவும் பதற்றமான சூழலை தவிர்ப்பது தொடர்பாக ஈரானுடன் பேசுமாறு ஈராக் மற்றும் பாகிஸ்தானை சவுதி அரேபியா கேட்டுக் கொண்டுள்ளது. சவுதி அரேபியாவின் அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது கடந்த செப்டம்பர் 14ம் தேதி, ஹவுதி...

ஈராக்: அரசுக்கு எதிரான போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைக்கு ஐ.நா. கண்டனம்

ஈராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்க காரணமான வன்முறைக்கு ஐ.நா. கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. ஈராக்கில் ஊழல், வேலையின்மை, பொருளாதார பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் அப்துல் மஹதி அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அந்த...

அரசுக்கு எதிராக 4 நாட்கள் நடந்த போராட்டத்தில் 60 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் அரசுக்கு எதிராக தொடர்ந்து 4வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து, பலி  எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. ஈராக்கில் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, ஊழல், மோசமான பொது சேவை உள்ளிட்ட பிரச்சினைகளை குறிப்பிட்டு கடந்த 4 தினங்களாக...

ஒரு மணி நேர இன்பத் திருமணம்..!! அதிர்ச்சியூட்டும் ஆவணப்படம்

ஈராக்கில் 9 வயது முதலான சிறுமிகளை ஒரு மணி நேரத்துக்கு வரதட்சணை கொடுத்து இன்பத் திருமணம் செய்துகொள்ள இஸ்லாமிய மதகுருக்கள் அனுமதிப்பதாக பிபிசி துப்பறிந்த ஆவணப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிபிசி ஐ பிளேயரில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தின் படி, ஈராக்கின் புனிதமான இடங்களில்...

வேலையின்மை, ஊழலை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு

பொருளாதார பிரச்சனை, வேலையின்மையை காரணம் காட்டி ஈராக் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. ஈராக் பிரதமர் அப்துல் மஹதி தலைமையிலான அரசு பொருளாதார பிரச்சனை, வேலையின்மை, ஊழல் உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காண வலியுறுத்தி நேற்று முன்...

ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை - 26 பேர் பலி

ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில் பலியானவர்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. வேலை வாய்ப்பின்மை, ஊழல், பொருளாதார சரிவு, அரசு நிர்வாக மந்த செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து ஈராக்கில் போராட்டம் வெடித்துள்ளது. பாக்தாத்,...

ஈராக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்

ஈராக்கில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும், அதனால் ஏற்பட்ட வன்முறையிலும் 5 பேர் கொல்லப்பட்டனர். அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் பாக்தாத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து காவல்துறையினர் கண்ணீர் புகை...

ஈராக்கில் முதன்முறையாக கலவரத் தடுப்புப் பிரிவில் பெண் காவலர்கள்

ஈராக்கில் முதன்முறையாக கலவரத் தடுப்புப் பிரிவில் பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். காவல் துறையின் தலைமையிடமான தோஹக் நகரில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிராக வழங்கப்பட்ட கைது வாரண்டுகளை நிறைவேற்றுவது, பெண் சந்தேக நபர்களை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது மற்றும் பெண்கள்...