​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தென்மேற்கு வங்கக்கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இராமேஸ்வரத்தில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. எனவே மறுஅறிவிப்பு வரும் வரை இராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள்...

விவசாயிகளுக்கு கைகொடுக்காத மானாவாரிப் பயிர்கள் - பயிர்களுடன் கருகிப்போன விவசாயிகளின் நம்பிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக பயிர்கள் கருகி, கால்நடைகளுக்கு தீவனமாகி வருகின்றன. கடும் இழப்பைச் சந்தித்துள்ளதால் வாழ்வாதாரம் தேடி வெளியூர்களுக்கு இடம்பெயரவுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பசும்பொன், முஸ்டக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட...

நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் ஏற்பட்ட சண்டையில் கணவன் உயிரிழந்த வழக்கு; பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி, பெண்ணை விடுதலை

மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் ஏற்பட்ட சண்டையில் கணவன் உயிரிழந்த வழக்கில், பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி, பெண்ணை விடுதலை செய்து ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கம்பிபாடு பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். மீனவரான இவர், மனைவி...

விசாரணைக்கு அழைத்துச் சென்றவரை தாக்கிய வழக்கில் காவல் ஆய்வாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை

விசாரணைக்கு அழைத்துச் சென்றவரை சட்டத்திற்குப் புறம்பாகத் தாக்கிய வழக்கில் காவல் ஆய்வாளருக்கு ஓராண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து இராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  இராமநாதபுரத்தையடுத்த மேலமங்களம் கணேசன் என்பவரை கடந்த  2005ஆம் ஆண்டு நகைத்திருட்டு வழக்கு தொடர்பாக நைனார்கோவில் காவல்நிலையத்திற்கு...

விசாரணைக்கு அழைத்துச் சென்றவரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக வழக்கு

விசாரணைக்கு அழைத்துச் சென்றவரை சட்டத்திற்குப் புறம்பாகத் தாக்கிய வழக்கில் காவல் ஆய்வாளருக்கு ஓராண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து இராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இராமநாதபுரத்தையடுத்த மேலமங்களம் கணேசன் என்பவரை கடந்த 2005ஆம் ஆண்டு நகைத்திருட்டு வழக்கு தொடர்பாக நைனார்கோவில்...

சேதமடைந்த மின்கம்பத்தை அதிகாரிகள் சரிசெய்யாததால் மரக்கம்புகளைக் கொண்டு சரிசெய்த பொதுமக்கள்

இராமநாதபுரம் அருகே சேதமடைந்த மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் சரிசெய்யாததால் பொதுமக்களே மரக்கம்புகளைக் கொண்டு சரிசெய்துள்ளனர். உயிரிழப்புகள் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்துள்ள செவ்வூர் கிராமத்தில்...

ராமநாதபுரத்தில் டிடிவி தினகரன் அணியினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு

ராமநாதபுரத்தில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் வீடுகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட கொத்தத் தெருவில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான கமல் மற்றும் தவமுனியசாமி ஆகியோரின் வீடுகள் உள்ளன. இங்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர்....

கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் - பந்தய இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்த மாடுகள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தேர்த் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. கல்லல் சோமசுந்தரர் சௌந்தரநாயகி அம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த பந்தயத்தில் மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 32 ஜோடி மாடுகளுடன்...

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அதிமுக கரைவேட்டி கட்ட கூடாது - மணிகண்டன் ஆவேசம்

டிடிவி தினகரன் அணியினர் யாரேனும் அ.தி.மு.க கரைவேட்டி கட்டினால், அந்த வேட்டியை  உருவும்படி அமைச்சர் மணிகண்டன் ஆவேசமாகப் பேசியுள்ளார். இராமநாதபுரம் அரண்மனை அருகே நேற்று நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் பங்கேற்றுப் பேசினார். அப்போது அதிமுக கரை வேட்டி...

மாவட்ட வளர்ச்சித் திட்டம் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பின்தங்கிய மாவட்டங்களை ஆய்வு செய்து வளர்ச்சித் திட்டங்களை வகுக்கும் திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இராமநாதபுரத்துக்கு வந்துள்ளார். விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற...