​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கண்காணிப்புக்கான செயலி வலையில் சிக்கிய 100 பெண்கள்..! கணினி பொறியாளர் கைது

ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்யக்கூடிய கண்காணிப்புக்கான செயலி மூலம் 100 க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க விவகாரங்களை படம் பிடித்து மிரட்டி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கணினி பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்மார்ட் போன்களை பெண்கள் மூன்றாம் நபர்களிடம் கொடுப்பதால் ஏற்படும்...

நெடுஞ்சாலைப் பணிகளில் முறைகேடு நடைபெறவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

நெடுஞ்சாலைத் துறையின் சாலை பராமரிப்புப் பணிகளில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் மறுப்புத் தெரிவித்துள்ளார். அனுபவமும், தொழில்நுட்ப ஆற்றலும் உள்ள ஒப்பந்தகாரர்கள் மூலம் சாலைகளை 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பராமரிப்பதற்கான ஒப்பந்த திட்டம், உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றுவருவதாக ஜெயக்குமார் ...

ICICI வங்கியில் சுயஉதவிக் குழுக்கள் மூலம் 17இலட்சம் பெண்கள் இணைப்பு

ஐசிஐசிஐ வங்கியின் மகளிர் சுய உதவிக் குழுக்களை இணைக்கும் திட்டத்தில் 17லட்சம் பெண்கள் இணைந்துள்ளனர். ஐசிஐசிஐ வங்கி மகளிர் சுயஉதவிக் குழுக்களை இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. முறையான வங்கிச் சேவைகள் கிடைக்கப் பெறாதவர்களுக்கு வங்கிச் சேவைகளை அளித்துப் பெண்களைத் தற்சார்பு மிக்கவர்களாக...

சாலையோரத்தில் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் குவிப்பு

இராமநாதபுரம் அருகே நெடுஞ்சாலை ஓரங்களில் மருத்துவக் கழிவுகளைக் குவித்துத் தீவைத்து எரிப்பதால் அவ்வழியாகச் செல்வோருக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இராமநாதபுரம் அருகே பேராவூரில் லாரிகளில் கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் ஆகியவற்றைச் சாலையோரத்தில் குவித்தும் அவற்றைத் தீவைத்து...

மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து நொடிக்கு மூவாயிரத்துத் தொண்ணூறு கனஅடியாக அதிகரித்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீருக்கும், பாசனத்துக்கும் அடிப்படையாகத் திகழ்வது முல்லைப்பெரியாறு அணை....

தென்தமிழகக் கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம்

தென்தமிழகக் கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்துக் கன்னியாகுமரி, இராமநாதபுர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.  வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பகுதிகளில் மணிக்கு 55கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், தென்தமிழகக்...

பாம்பன் ரயில்வே பாலத்தில் ரயில்வே உயர் அதிகாரி ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் இரயில் பாலத்தில் புதிய தூக்குப்பாலம்அமைக்கும் பணி அடுத்த ஆண்டு தொடங்கும் எனப் பாலத்தைப் பார்வையிட்ட ரயில் சக்கரத் தொழிற்சாலைப் பொதுமேலாளர் அகர்வால் தெரிவித்துள்ளார். மண்டபத்தையும் ராமேஸ்வரம் தீவில் உள்ள பாம்பனையும் இணைக்கும் ரயில்வே பாலம் 1914ஆம் ஆண்டு கட்டி...

வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் விளைபொருட்களை மின்னணு ஏலமுறையில் விற்பனை செய்ய நடவடிக்கை

சேலம், ஈரோடு உள்ளிட்ட 8 வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில், விவசாய விளைபொருட்களை மின்னணு ஏலமுறை மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்செங்கோடு, ஆத்தூர், சேலம், ஈரோடு, பெருந்துறை, அவிநாசி, இராசிபுரம், நீலகிரி ஆகிய 8 வேளாண்மை உற்பத்தியாளர்கள்...

குடிகாரக் கணவன் திருந்தாததால் மகளைக் கொன்று தற்கொலை செய்த தாய்

இராமநாதபுரத்தில் குடிகாரக் கணவர் திருந்தாததால் மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டுத் தானும் விஷத்தைத் தின்று தாய் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரத்தை அடுத்த சடையன் வலசையைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி மகேந்திரன். கட்டுமானத் தொழிலாளியான மகேந்திரன் குடித்துவிட்டு மனைவி முத்துமாரியுடன் அடிக்கடி...

நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் சாமியாரின் குறி பீடம்

ராமநாதபுரத்தின் முக்கிய நீராதாரமான லக்ஷ்மிபுரம் ஊருணிக்குச் செல்லும் நீர்வரத்துக் கால்வாயை சாமியார் ஒருவர் ஆக்கிரமித்து கோவில் கட்டி குறி சொல்லி வருவதாக புகார் எழுந்துள்ளது. கோவிலை அகற்றுமாறு ஆட்சியரே உத்தரவிட்ட பிறகும் அதிகாரிகளின் உதவியோடு தொடர்ந்து இயங்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.  இராமநாதபுரம் நகரின்...