​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வைகையாற்றில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகை ஆற்றில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர்த் தேவைக்காக செப்டம்பர் 10 ஆம் நாள்...

பாக்நீரினை, மன்னார் வளைகுடா பகுதியை கண்காணிக்க புதிய ரோந்து கப்பல்

பாக்நீரினை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியை கண்காணிப்பதற்காக மண்டபம் வந்த இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான அதிநவீன ரோந்து கப்பலுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்ம் மண்டபத்தில் இந்திய கடலோரகாவல்படை நிலையம் உள்ளது. இங்கு 5 ஹோவர்கிராப்ட் கப்பல்கள் மற்றும்...

ஆற்றில் மணல் திருடிய லாரிகளை பொதுமக்கள் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

இராமநாதபுரத்தை அடுத்த சோழந்தூர் அருகே ஆற்றில் மணல் திருடிய லாரிகளை பொதுமக்கள் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இராமநாதபுரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் வலது புறம் குண்டத்தூர் அருகே மணல் பொதிந்து கிடப்பதை அறிந்த சில மணல் கொள்ளையர்கள், இரவு பகலாக மணல்...

இம்மானுவேல் சேகரனின் 61ஆம் ஆண்டு குருபூஜையையொட்டி அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மரியாதை

இம்மானுவேல் சேகரனின் 61ஆம் ஆண்டு குரு பூஜையையொட்டி அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள் ராஜலட்சுமி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர். இதையொட்டி பரமக்குடியிலுள்ள அவரது நினைவிடம் அலங்கரிக்கபட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்....

மதுபோதையில் தாறுமாறாக அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர், பயணிகளின் எதிர்ப்பால் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பிய ஓட்டம்

இராமநாதபுரத்தில் மதுபோதையில் தாறுமாறாக அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர், பயணிகளின் எதிர்ப்பை தொடர்ந்து சாலையிலேயே நிறுத்திவிட்டு தப்பினார். இராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை நோக்கி அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை இளங்கோ என்பவர் இயக்கினார். ஆரம்பத்தில் இருந்தே பேருந்தை தடுமாற்றத்துடன் இயக்கிய ஓட்டுனரின்...

முதியவரின் விரைப்பையில் இருந்து 40 கிலோ கட்டி அகற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவர்கள் சாதனை

முதியவரின் விரைப்பையில் இருந்து 40 கிலோ எடையிலான கட்டியை அகற்றி ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். இராமநாதபுரம் வண்டிக்கார தெருவைச் சேர்ந்த மோகன் என்ற 64 வயது முதியவருக்கு யானைக்கால் நோய் காரணமாக விரைப்பையில் கட்டி வளர்ந்துள்ளது. அவர்...

கடலில் அத்துமீறி நுழைந்ததாக 6 தமிழக மீனவர்கள் ஈரான் கடற்படையினரால் கைது

தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், அத்துமீறி தங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்ததாக ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த பூமி, பால்குமார், சதீஸ், துரைமுருகன், அலெக்ஸ்பாண்டியண் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மில்டன் ஆகிய 6 பேர்...

இராமநாதபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

இராமநாதபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில், இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 மணி...

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவும் நிலையிலும் விவசாயத்தைக் கைவிடாத விவசாயிகள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவும் நிலையிலும் பாண்டியூர் விவசாயிகள் விவசாயத்தை விடாமல் தொடர்ந்து விவசாயம் செய்வதுடன் விவசாயக் கூலித் தொழிலாளர்களை வாழ வைத்து வருகின்றனர்.  இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளாகப் போதிய மழை இல்லாமல் பல இடங்களில் கடும் தண்ணீர்ப் பஞ்சம்...

ஒரே நாளில் 4 வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

இராமநாதபுரத்தில் ஒரே நாளில் 4 இடங்களில், வீட்டின் பூட்டை உடைத்து 102 சவரன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற முகமுடிக் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். பட்டிணம்காத்தான் ஆத்மநாதசுவாமி நகரைச் சேர்ந்த ஆசிரியரான அண்ணாதுரை என்பவரது வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள், பீரோவை...