​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2019, பிப். 3 வரை மட்டும் பன்றிக் காய்ச்சலால் 226 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் 226பேர் உயிரிழந்ததாக மத்திய நலவாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆண்டில் பிப். 3 வரை நாடு முழுவதும் ஆறாயிரத்து அறுநூறு பேருக்குப் பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், 226உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும்...

இரவு 8 மணிக்கு மேல் மது விற்றால் கடைகளின் உரிமத்தைப் பறிக்க வேண்டும்

இராஜஸ்தானில் இரவு 8மணிக்கு மேல் மது விற்றால் தண்டம் விதிக்கப்படும் என்றும், கடையின் உரிமம் பறிக்கப்படும் என்றும் முதலமைச்சர் அசோக் கெலாட் எச்சரித்துள்ளார். இராஜஸ்தானில் 2008-2013காலக்கட்டத்தில் அசோக் கெலாட் முதலமைச்சராக இருந்தபோது இரவு 8மணியுடன் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். இப்போது மீண்டும் ஆட்சியைப்...

போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப் பெறக் காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் கோரிக்கை

ஏப்ரல் 2இல் நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால் வெளியில் இருந்து ஆதரவளிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் எனக் காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதை...

அனுமான் விளையாட்டு வீரர் என உத்தரப்பிரதேச அமைச்சர் சேட்டன் சவுகான் கருத்து

அனுமார் விளையாட்டு வீரர் என உத்தரப்பிரதேச அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சேட்டன் சவுகான் தெரிவித்துள்ளார். இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலின்போது ஆல்வாரில் பேசிய உத்தரப்பிரதேச முதலமைச்சர் அனுமானைத் தலித் எனக் குறிப்பிட்டார். இதையடுத்து அனுமான் பழங்குடியினத் தலைவர் என்றும், முஸ்லிம் என்றும் வெவ்வேறு...

ராஜஸ்தான் முதலமைச்சராக கெலாட், மத்திய பிரதேச முதலமைச்சராக கமல் நாத் பதவி ஏற்பு

ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட்டும், மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத்தும் பதவியேற்றுக் கொண்டனர்.  ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் 99தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தலைநகர் ஜெய்ப்பூரில் ஆல்பர்ட் அரங்கில் நடைபெற்ற விழாவில் அசோக் கெலாட் இராஜஸ்தான்...

ராஜஸ்தான் முதலமைச்சராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்

ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட்டும் துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் பதவியேற்றுக்கொண்டனர்.  இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் 99தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தலைநகர் ஜெய்ப்பூரில் ஆல்பர்ட் அரங்கில் நடைபெற்ற விழாவில் அசோக் கெலாட் இராஜஸ்தான் முதலமைச்சராகப்...

கடும் இழுபறிக்கு இடையே ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு

ராஜஸ்தான் முதலமைச்சராக அலோசக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சச்சின் பைலட் துணை முதலமைச்சராகிறார். இராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இராஜஸ்தானில் மாநிலக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சச்சின் பைலட், இருமுறை முதலமைச்சர் பதவியில்...

இராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் முதலமைச்சர் பதவிக்கு போட்டி, ராகுல்காந்தியின் வீட்டில் ஆலோசனைக் கூட்டம்

இராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் முதலமைச்சர் யார் எனத் தீர்மானிப்பதற்காகக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இராஜஸ்தானில் மாநிலக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்...

காங்கிரஸ் அலுவலகத்தின் முன் தொண்டர்கள் கொண்டாட்டம்

இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால் அந்தக் கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் வெடிகள் கொளுத்தியும் நடனமாடியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.  இராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில்...

ராஜஸ்தான் , தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

இராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி எழுபத்து இரண்டு புள்ளி ஏழு விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. பத்தேபூரில் வாக்குச்சாவடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் கலவரம் வெடித்தது. தெலுங்கானா மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுற்றது.  199 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் ஒரே...