​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், அமமுக போட்டியிடும் - டி.டி.வி. தினகரன்

20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், அமமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் இன்று சந்தித்துப் பேசினார். அவருடன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் சென்றிருந்தனர். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய தினகரன்,...

20-தொகுதிகளுக்கான இடைதேர்தலை சந்திக்கத் அ.தி.மு.க தயாராக உள்ளது - தங்கமணி

20-தொகுதிகளுக்கான இடைதேர்தல் எப்போது நடந்தாலும் சந்திக்க அ.தி.மு.க தயாராகவே உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆலோசனை கூட்டம் தனியார் திருமணமண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.வீரமணி, நிலோபர் கபில், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர்...

20சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால் மக்கள் நீதி மய்யம் எதிர்கொள்ளும்: கமல்ஹாசன்

தமிழகத்தில் 20சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இருக்கக் கூடும் என்றும், இருந்தால் மக்கள் நீதிமய்யம் அதற்கும் தயாராக இருக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது 64ஆவது பிறந்தநாளையொட்டிச் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது...

சசிகலாவிடம் ஆலோசனை நடத்த, ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் நாளை பெங்களூரு பயணம்

தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக போட்டியிடுவது குறித்து சசிகலாவிடம் ஆலோசனை நடத்த டிடிவி தினகரன் தமது ஆதரவாளர்களுடன் நாளை பெங்களூரு செல்ல இருக்கிறார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை...

ம.ஜ.க - காங். கூட்டணி MLA-களை இழுக்க 25 முதல் 30 கோடி ரூபாய் வரை பாஜக பேரம் - குமாரசாமி குற்றச்சாட்டு

மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக, பாரதிய ஜனதா கட்சி 25 முதல் 30 கோடி ரூபாய் வரையில் பேரம் பேசியதாக, கர்நாடக முதலமைச்சர் H.D.குமாரசாமி குற்றம்சாட்டியிருக்கிறார். கர்நாடக மாநில இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றிக்குப் பின்...

கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு..! 4 தொகுதிகளில் காங்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி வெற்றி

கர்நாடக இடைத்தேர்தலில் 2 மக்களவை தொகுதிகளிலும், 2 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. ஒரு மக்களவைத் தொகுதியில் மட்டும் பாஜக வெற்றிபெற்றது. கர்நாடகத்தில் பல்லாரி, ஷிவமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், ராமநகரா, ஜமகண்டி ஆகிய சட்டமன்ற...

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.  கர்நாடகத்தில் பல்லாரி, ஷிவமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், ராமநகரா, ஜமகண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில்,...

கர்நாடக இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கம்

கர்நாடக இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஷிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 மக்களவை மற்றும் ராம்நகரம், ஜமகண்டி ஆகிய 2 பேரவை தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஷிவமொக்கா தொகுதியில்...

கர்நாடக இடைத்தேர்தல்: அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி உறுதி - எடியூரப்பா

கர்நாடக மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. கர்நாடக மாநிலத்தில் காலியாக இருந்த ஷிமோகா, பெல்லாரி, மற்றும் மாண்டியா மக்களவைத் தொகுதிகளுக்கும் ராமநகரா மற்றும் ஜம்கந்தி ((Jamkhandhi)) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஷிமோகாவில்...

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கட்சி எடுத்த முடிவின் படி சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக திருமாவளவன் திட்டவட்டம்

இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்றும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் கட்சி எடுத்த முடிவின் படி சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டபின்...