​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு

கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து நாளைமுதல் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆழியாறு பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின்...

கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடரும் கனமழை காரணமாக கடந்த ஒருவார காலமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கோவையில் உள்ள அனைத்து...

ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மலர்தூவி வரவேற்பு

பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மலர்தூவி வரவேற்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி,ஆழியார் அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 80 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத்...

ஆழியாறு அணையில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில் குளிக்கச் சென்ற  கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தமிழ்ப்புத்தாண்டு விடுமுறை தினத்தை முன்னிட்டு கோவை ராமகிருஷ்ணா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேர் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்...

பரம்பிக்குளம்-ஆழியார் திட்டத்தில் கேரளாவுக்கு நீர் திறக்க கூடாது - தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர், பாசனத் தேவைகளை கருத்தில் கொண்டு பரம்பிக்குளம் - ஆழியார் திட்டத்தின்கீழ் கேரளாவுக்கு தண்ணீர் திறப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டுமென தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கோரிக்கையை முன்வைத்து கொங்கு...

ஆழியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஆழியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பரம்பிக்குளம் – ஆழியாறு திட்ட ஒப்பந்தப்படி, கேரளாவுக்கு ஆண்டுதோறும் 7.25 டி.எம்.சி தண்ணீரை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தாண்டு, ஏற்கனவே 5 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள...