​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொன்னையனின் குற்றச்சாட்டு அனைத்து ஆதாரமற்றவை - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்

ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணையில், பொன்னையன் இதற்கு முன்புவைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆறுமுகசாமி ஆணையத்தில், பொன்னையனிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து பேட்டியளித்த வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், அப்போலோ மருத்துவர்கள் சிறப்பான...

முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர்.

சென்னை ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜராகக்...

செவ்வாய்க்கிழமை ஆறுமுகசாமி ஆணையத்தில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக ராதாகிருஷ்ணன் தகவல்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் மீண்டும் வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  ஆறுமுக சாமி ஆணையத்தில் இன்று காலை ஆஜரான அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் காலை 10.30 மணி முதல்...

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.  ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த 75 நாட்கள் தொடர்பான சிகிச்சை விவரங்கள் மற்றும் அரசிடம் இருந்த  சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆணையத்திடம்...

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு வரும் 20-ம் தேதி ஓ.பி.எஸ் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா சிகிச்சை குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பது பற்றி சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கரிடம் ஆலோசிக்கப்பட்டதா? எதன் அடிப்படையில் சிகிச்சைக்காக...

OPS-க்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட வாய்ப்புள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோர் வரும் 18-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதா...

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 14ந் தேதி நேரில் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், வரும் 14ஆம் தேதி சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், இதுவரை மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 130க்கும் மேற்பட்டோரை அழைத்து விசாரணை...

ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு சம்மன்

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், வரும் 17ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகுமாறு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமியை விசாரிக்க ஏற்கெனவே, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அவரிடம், ஜெயலலிதா மருத்துவமனையில்...

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமியை விசாரிக்க ஏற்கெனவே சம்மன்...

சசிகலாவை நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவை நேரில் விசாரிப்பது தொடர்பாக தமிழக உள்துறைக்கும், பெங்களூர் சிறைத்துறை அதிகாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த...