​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பனிப்பொழிவால் மூடிய சாலைகள் - போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு

மத்திய மற்றும் வடக்கு அமெரிக்காவில் வழக்கத்திற்கு மாறாக நிலவும் குளிர்ந்த வெப்பநிலை மற்றும் அதிவேக காற்றினால் ஏற்பட்ட பனிப்பொழிவால் பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு டகோடா பகுதியில் உள்ள குல்ம் நகரத்தில் ஏற்பட்ட பனிப்புயலால்  சாலைகள் முழுவதும்...

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை ஆய்வு செய்ய 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் - சத்யபிரதா சாகு

தமிழகம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்பு பணியை ஆய்வு செய்ய 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, பெயர் திருத்தம், நீக்கம், சேர்த்தல் பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட அவகாசம், இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்காளர்கள்...

சொத்துக்காக சொந்த தம்பியைக் கொன்ற சகோதரி ?

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் வீட்டுக்குத் திருமண அழைப்பிதழ் வைக்க வந்த தம்பியையும் அவரது மனைவியையும் சொத்து தொடர்பான முன்விரோதத்தில் உடன்பிறந்த சகோதரியே கொலை செய்து புதைத்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்தில் சகோதரியும் அவரது மருமகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் அருகே...

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்...

திருத்தணி வட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 11 மாத குழந்தை உட்பட அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த நிலையில் கோவையிலும் டெங்கு காய்ச்சலுக்கு 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன. இதை தொடர்ந்து டெங்குவின் பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை...

9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகை, தஞ்சை ஆகிய...

பிரதமர் மோடியை விமர்சித்து கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த போலி புகைப்படம்

மாமல்லபுரம் கடற்கரையை பிரதமர் மோடி சுத்தம் செய்ததை விமர்சித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த புகைப்படம் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது. கடந்த வாரம் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு சென்னை...

வேதபாறை அருகே நீர் தேக்கம் கட்ட பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நீர் தேக்கம் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வனப்பகுதிகளிலிருந்து காட்டாறு மூலம் வெளியேறும் மழை வெள்ளம் வேதபாறை ஓடை வழியாக பவானி ஆற்றில் கலக்கிறது. இந்த நிலையில் கள்ளிப்பட்டி,...

தனியார் மசாலா நிறுவன சேமிப்புக் கிடங்கில் திடீர் தீவிபத்து

தேனி அருகே ஈஸ்டர்ன் மசாலா நிறுவன சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியுள்ளன. காலை 9 மணி முதல் கொழுந்து விட்டு எரிந்து வரும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி...

கேஸ் சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 மாடி வீடு இடிந்து விழுந்து 10 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தில் முகமதாபாத் பகுதியில், வாலித்பூர் என்ற கிராமத்தில் இன்று காலை பெரும் சத்தத்துடன் 2 மாடி வீடு...

நேபாளம் -சீனா இடையே சுரங்க ரயில்,சாலை அமைக்க திட்டம்

நேபாளத்தில் சுரங்க ரயில் அமைப்பது உள்ளிட்ட சில ஒப்பந்தங்களில் சீனா கையெழுத்திட்டுள்ளது. மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங் நேபாளத்திற்கு சென்றார். காட்மண்டுவில் நேபாள அதிபர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்தியதை அடுத்து பல்வேறு...