​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கடப்பாவில் வேன் மீது லாரி மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் கடப்பாவில் வேன் மீது லாரி மோதி 7 பேர் உயிரிழந்தனர். அனந்தப்புரம் மாவட்டம் குத்தி என்ற இடத்தைச்  சேர்ந்தவர்கள் திருப்பதிக்கு திருமணத்திற்காக வேனில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. கடப்பா மாவட்டம் புள்ளம்பட்டு அருகே வேன்...

திருப்பதி திருமலையில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி, தமிழர்கள் 20 பேர் கைது

திருப்பதி திருமலையில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி, தமிழர்கள் 20 பேரை திருப்பதி போலீசார் கைது செய்தனர். ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே உள்ள உணவகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தமிழர்கள் உணவு அருந்திக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த...

கொடைக்கானல் சுற்றுலா இடங்களில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா

கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில்  சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சீசன் தொடங்கியுள்ளதால், தமிழகம் மட்டுமின்றி  கேரளா, ஆந்திராவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு...

திரிபுரா நிறுவனத்தின் ரூ.85 கோடி சொத்துக்களை முடக்க நடவடிக்கை..!

வாடிக்கையாளர்களின் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த திரிபுரா நிறுவனத்தின் 85 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 140 கிளைகளை கொண்டும்,சென்னையை தலைமையிடமாக கொண்டும்...

இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து உயர்வு

இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்து 34,969  புள்ளிகளைத் தொட்டது. தேசிய பங்குச் சந்தையான நிப்டி 74 புள்ளிகள் அதிகரித்து 10,692 புள்ளிகளில் நிறைவடைந்தது.  ஆக்சிஸ் வங்கி, ஆந்திரா...

வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இளைஞன் கைது

திருப்பதி சேஷாச்சல வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் உலவிய இளைஞரை செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். சேஷாச்சல வனப்பகுதியில் உள்ள நாகபட்லா வனச்சரகத்தில் செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தெய்யால கொணா என்ற இடத்தில், மூன்று...

1.34 லட்சம் ஆதார்கார்டுதாரர்களின் விவரங்கள் இணையத்தில் கசிவு

ஆந்திராவில், ஒரு லட்சத்து 34 ஆயிரம் ஆதார்கார்டுதாரர்களின் விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள், அரசு இணையதளத்தில் கசிந்துள்ளது. ஆந்திர பிரதேச அரசின் வீட்டுவசதி கழக இணையதளத்தில், ஒரு லட்சத்து 34 ஆயிரம் பயனாளர்களின் ஆதார் கார்டு விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு...

ரயில் கழிவறையில் பிரசவம் நிகழ்ந்து குழாய் வழியாக விழுந்த குழந்தை

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டபோது, தண்டவாளத்தில் இருந்து பிறந்த குழந்தையின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ரயிலில் பயணம் செய்த ஏதோ ஒரு பெண்ணுக்கு  கழிவறை சென்றபோது திடீர் பிரசவம் ஏற்பட்டு, கழிவறை குழாய்...

ஆந்திராவில் 2 ஆயிரம் சேலைகளால் பயிர்களுக்கு பந்தல் போட்ட விவசாயி

ஆந்திராவில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தக்காளி பயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக, விவசாயி ஒருவர் 2 ஆயிரம் புடவைகளால் பந்தல் அமைத்துள்ளார். அனந்தபூர், மாமில்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மனுக்கர் நாயுடு 3 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட தக்காளி பயிர் கருகி விடக்...

செல்போன் வெடித்துச் சிதறியதில் பெண் பலி

ஆந்திராவில் செல்போன் வெடித்துச் சிதறி ஒரு பெண் பலியான நிலையில், மரண தகவல் கேட்ட உறவினரும் உயிரிழந்தார். கடப்பா மாவட்டம் சக்ராயபேட்டை அருகே கலூருபள்ளே தாண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தம்மா. இவர் சார்ஜ் போட்டிருந்த செல்போனை விடுவிக்கும்போது, திடீரென அது வெடித்துச்...