​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பான்கார்டு விபரத்தை அளிக்காத மக்கள் பிரதிநிதிகள்

நாடு முழுவதும் 7 எம்பி-க்கள் 199 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு விவரங்களை வெளியிடவில்லை என்று ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. எம்பி மற்றும் எல்எல்ஏ தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் பான் கார்டு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.  ஆனால் அப்படி  தெரிவிக்காத மக்கள்...

திருவள்ளூர் அருகே கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக் கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர் அருகே கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக-ஆந்திர எல்லையான தாடூர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் செம்மரக் கட்டைகள் பதுக்கிவைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு...

இவங்க தான் ரயிலுக்கு ஓனராம்..! ரயில்வே ஊழியர்கள் அட்டூழியம்

ஆந்திராவில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ரெயில்வே ஊழியர்கள் சிலர் பணம் வைத்து சூதாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. டிக்கெட் வாங்கி ரயிலில் பயணிக்கும் பயணிகளின் உடமைக்கும் உயிருக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் புகைபிடித்தபடி ஓசி பயணம் செய்யும் ரயில்வே ஊழியர்களின்...

சித்தூர் அருகே செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற இரு தமிழர்கள் கைது

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே செம்மரங்களை வெட்டிக் கடத்த முயற்சித்த தமிழகத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். நாரவாரிப்பள்ளியை அடுத்த பீமாவரம் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த போலீசாரைக் கண்டதும் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டிருந்த 20க்கும் மேற்பட்டோர் தப்ப முயன்றனர். அவர்களில் வேலூர் மாவட்டத்தைச்...

நெல்லூர், கடப்பாவில் செம்மரக் கடத்தல்காரர்கள் 39 பேர் கைது

ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் கடப்பாவில் செம்மரக் கடத்தல்காரர்கள் 39 பேர் கைது செய்யப்பட்டு 3 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செய்தியாளர்களிடம் பேசிய நெல்லூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணா, செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்பு தனிப்படையின்...

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை மாற்றப்படுகிறது

புதிதாக நிறுவப்பட உள்ள ஜெயலலிதா சிலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகே கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, ஜெயலலிதாவின் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையின் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள்...

டாடா மேஜிக் வாகனத்தின் மீது லாரி மோதி 8 பேர் உயிரிழப்பு - 8 பேர் காயம்

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே டாடா மேஜிக் வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். மாக்கவரபாளையத்தைச் சேர்ந்த 14 பேர் காக்கிநாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றுவிட்டு டாடா மேஜிக் வாகனத்தில்...

ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கிக்கொள்ளும் விநோத திருவிழா

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே ஒருவரை ஒருவர் தடிகளைக் கொண்டு தாக்கிக்கொள்ளும் நூதன திருவிழாவில், பங்கேற்ற 2 பேர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.  கர்னூல் மாவட்டம் தேவரகட்டு மலைக்குன்றின் மீதுள்ள மாலமல்லேஷ்வர சுவாமி கோவிலில் தசரா விழாவின் நிறைவு நாளில் ஒருவரை...

திருப்பதியில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் NTR வாழ்க்கை சரித்திர திரைப்படத்திற்கான படத் தொடக்கவிழா

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்டிஆரின் வாழ்க்கைச் சரித்திரத்தை குறிக்கும் லட்சுமிஸ் என்.டி.ஆர் திரைப்படத்திற்கான படத் தொடக்கவிழா திருப்பதியில் நடைபெற்றது. அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி லட்சுமிஸ் என்.டி.ஆர். திரைப்படம் வெளியாகும் என்று படத்தின் இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்தார்....

வடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவ மழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி, கேரளாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை பெய்தது....