​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆந்திரா, தெலுங்கானாவில் கடும் பணத்தட்டுப்பாடு

ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நிலவியதைப் போல, ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  வங்கிகள் திவாலானால் வாடிக்கையாளர்களின் சேமிப்பு மற்றும் வைப்பு நிதியைக் கொண்டு அவற்றை நெருக்கடியில் இருந்து மீட்க வகை செய்யும் நிதித்தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு மசோதா குறித்த...

சந்திரபாபு நாயுடு ஏப்ரல் 2,3 தேதிகளில் டெல்லி பயணம் - பல்வேறு கட்சியினருடன் சந்திப்பு

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வரும் ஏப்ரல் 2 மற்றும் 3 தேதிகளில் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகளுடன் சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்....

3.5 சதவீதம் சரிவைச் சந்தித்த ஐ.டி.பி.ஐ. வங்கி பங்குகள்

ஐ.டி.பி.ஐ. வங்கியில் 772 கோடி ரூபாய் கடன் மோசடிப் புகார்களை அடுத்து அந்த வங்கியின் பங்கு விலை சரிந்தது. 2009 முதல் 2012-ம் ஆண்டு வரை மீன் பண்ணைகள் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு கடன் கொடுக்கப்பட்டதில் போலி ஆவணங்கள் மூலம் மோசடி நடைபெற்றிருப்பதும்,...

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி YSR காங்கிரஸ் கட்சி MP'கள் ராஜினாமா செய்ய முடிவு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பிக்கள் 9 பேர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அரசு, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அறிவிப்பை வெளியிடத்...

மத்திய பாஜகவுடன் தெலுங்கு தேசம் கூட்டணி முறிவால் ஆந்திராவுக்கு பின்னடைவு?

பா.ஜ.க.வுடனான உறவை தெலுங்குதேசம் முறித்துக் கொண்ட நிலையில், சிங்கப்பூரைப் போல் ஆந்திர தலைநகரை அமைப்பது என்ற சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டத்துக்கு ஒத்துழைப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜயவாடா அருகே கிருஷ்ணா நதிக்கரையில் 217சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உருவாக்கப்படும் அமராவதி நகர்...

உண்மைக்குப் புறம்பான தகவல்களை அமித் ஷா கூறுவதாக சந்திரபாபு நாயுடு பதிலடி

தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திராவுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக பாஜக தலைவர் அமித் ஷா எழுதிய கடிதத்திற்கு பதில் அளித்த நாயுடு, அவர் உண்மைக்குப்...

அமராவதியில் பிரம்மாண்ட கட்டிடத்தின் 46ஆவது தளத்தில் முதலமைச்சர் அலுவலகம்

ஆந்திராவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய தலைநகரான அமராவதியில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் அலுவலகம் பிரம்மாண்டமான கட்டிடத்தின் 46வது தளத்தில் அமைய உள்ளது. தெலுங்கானா தனிமாநிலமாகப் பிரிந்து சென்றதைத் தொடர்ந்து, ஆந்திராவுக்கென புதிய தலைநகராக 217 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமராவதி...

நெல்லூரில் செம்மரம் கடத்திய வழக்கில் 9 பேர் கைது

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் செம்மர கடத்தல் வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெங்கடாச்சலம், சில்லகூறு, நாயுடுபேட்டா, பகுதிகளில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒரே நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உள்ளூர் நபர்கள் மற்றும் சர்வதேச கடத்தல்காரர்கள்...

மத்திய அரசு பரிந்துரைக்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஒன்றுபட்டு போராட கர்நாடக முதலமைச்சர் சீதாராமையா அழைப்பு

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகையைப் பின்பற்றுவது குறித்த மத்திய அரசு பரிந்துரைக்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஒன்றுபட்டு போராட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை முறையாக செயல்படுத்தும் மாநிலங்களில் மக்களவைத்...

ஆந்திர அரசியல் சதுரங்கத்தில் அ.தி.மு.க.வை இறக்க வேண்டுமா ? : ஸ்டாலினுக்கு தம்பிதுரை கேள்வி

ஆந்திர அரசியல் சதுரங்கத்தில் அ.தி.மு.க.வையும் இறக்கிவிட்டு, தமிழர்களுக்கு மீண்டும் வரலாற்றுப் பிழையை இழைக்க மு.க. ஸ்டாலின் துடிக்கிறாரா என்று மக்களவை துணை சபாநாயகர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முன்மொழிந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை, அ.தி.மு.க.வும் ஆதரித்து...