​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கவிழ்ந்து கிடந்த லாரி மீது டெம்போ டிராவலர் வேன் மோதியதில் 8 பேர் படுகாயம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஏற்கனவே விபத்துக்குள்ளான லாரி மீது டெம்போ டிராவலர் வேன் மோதியதில் 8 பேர் படுகாயமடைந்தனர். புதுச்சேரியில் இருந்து ஆந்திராவுக்கு கொசு அடிக்கும் பேட்கள் ஏற்றிச் சென்ற லாரி, நேற்று நள்ளிரவு எச்சூர் என்ற இடத்தில் சிறு...

ஜூன் 1 முதல் நாடு தழுவிய அளவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்...

ஏற்கனவே 16 மாநிலங்களில் அமலில் இருக்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம், வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் செல்லத்தக்க வகையில் ஒரே...

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.  பரவலாக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதற்காக 3 இடங்களில் தலைநகர் அமைக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்திருந்தார். அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டிணம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் அமைக்கப்படும்...

ஆந்திரா சட்டப்பேரவையில் 3 தலைநகர் அமைப்பதற்கான மசோதா தாக்கல்

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கும் முடிவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, அதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பரவலாக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதற்காக 3 இடங்களில் தலைநகர் அமைக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்திருந்தார். அதன்படி அமராவதி...

பாஸ்டேக் முறையால் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் அதிகரிப்பு

சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் குறையும் எனக் கூறி கொண்டுவரப்பட்ட பாஸ்டேக் முறையால், காத்திருக்கும் நேரம் 29 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.  சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் காத்திருக்கும் போது வீணாகும் எரிபொருளால், ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய்...

அரவக்குறிச்சி அருகே 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் சண்டை நிறைவு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் கட்டு என அழைக்கப்படும் சேவல் சண்டை நிறைவுப்பெற்றது. நாமக்கல், கோவை உள்ளிட அண்டை மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் சுமார் 25 ஆயிரம்...

ஆந்திர மாநில அரசு தலைநகரை மாற்ற முடிவு

ஆந்திராவின் தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றும் பணியில் அம்மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழு தாக்கல் செய்த அறிக்கை குறித்து விவாதிக்க ஜெகன்மோகன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது....

பீகாரில் நிதீஷ்குமார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம் -பாஜக தலைவர் அமித்ஷா

பீகாரில் நிதீஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என்ற அறிவிப்பின் மூலம், பாஜக தலைவர் அமித்ஷா ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளார். பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், நிதீஷ்குமார் தலைமையிலேயே...

பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி

ஆந்திராவில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன்கல்யாண் அறிவித்துள்ளார். விஜயவாடாவில் இரு கட்சி தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் பேசிய பவன்கல்யான், ஆந்திர மக்களின் நலனுக்காக, பாஜகவுடன கூட்டணி அமைத்திருப்பதாக கூறினார். 2024 ஆம்...

65 சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் நடைமுறைக்கு 30 நாள் விலக்கு

நெரிசலை தவிர்ப்பதற்காக, உத்தரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா ஆகிய  மாநிலங்களில் பணப்பரிவர்த்தனை அதிகம் உள்ள  65 சுங்கச்சாவடிகளில் மட்டும் அடுத்த 30 நாட்களுக்கு பாஸ்டேக் விதிமுறைகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் நெரிசலைத் தவிர்ப்பதற்காவும், வாகனங்கள் விரைவாக சுங்கச்சாவடிகளை  கடந்து செல்வதற்காகவும்,...