​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

செயின் பறிப்பில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த கொள்ளையன் கைது

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு விட்டு,விமானத்தில் தப்பிச் செல்லும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை கொண்டு சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அண்ணா நகர் பகுதியில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 3 செயின் பறிப்பு சம்பவம்...

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் தப்பியோட்டம்

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவிருந்த அரசு மருத்துவர் காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. நெல்லூர் மாவட்டம் உதயகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தவன் ரவீந்திரநாத் தாகூர். இவன் அங்குள்ள...

சென்னை அருகே பயங்கர விபத்து..! ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

சென்னை அருகே சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு ஆந்திராவில் இருந்து ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் சென்னை...

ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் ரூ.2000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு மோசடி உறுதி

ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகளில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரிஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி ஹைதராபாத், விஜயவாடா, கடப்பா, விசாகப்பட்டினம், டெல்லி, புனே உட்பட 3 பிரபல கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய...

விஜயகாந்த் திட்டங்களை தான் ஜெகன்மோகன் ரெட்டியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் செயல்படுத்தி வருகிறார் - பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்த் அறிவித்த திட்டங்களை தான் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியும், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலும் செயல்படுத்தி வருவதாக தேமுதிக பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் 20வது ஆண்டு கொடி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்,...

அட்சய பாத்திரமும்.. அந்த 8 திருடர்களும்..! ரூ.2 கோடி அபேஸ்

ஜாக்பாட் திரைப்படம் போல அட்சயபாத்திரம் வைத்திருப்பதாக ஏமாற்றி தொழில் அதிபரிடம் 2 கோடி ரூபாயை பறித்த ஆந்திர, கர்நாடக மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அள்ள அள்ள வற்றாமல் தங்க புதையல் தரும் அட்சய பாத்திரம் என ஓட்டை அட்டை...

தஞ்சை பெரிய கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் கும்பாபிசேகம் முடிந்து 6 நாள்கள் ஆனநிலையிலும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது. பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 5ம் தேதி வெகுவிமரிசையாக கும்பாபிசேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிசேகம் முடிந்து இன்றுடன் 6 நாள்கள் ஆகின்ற நிலையில்,...

விவசாயத்திற்காக போடப்பட்ட போரிலிருந்து வந்த பால் வண்ண தண்ணீர்

ஆந்திராவில் விவசாயத்திற்காக போடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் இருந்து பால் போல் வெண்மையாக தண்ணீர் வந்ததை அப்பகுதி மக்கள் அதனை ஆச்சரியத்துடன் பார்த்தனர். கர்னூல் மாவட்டம் கிரந்திவேமுலா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட சிவா ரெட்டி எனும் விவசாயி. தன்னுடைய விவசாய நிலத்தில் வெங்கட...

2019-ல் நிகழ்ந்த தீவிர வானிலை சம்பவங்கள்.. இந்தியாவில் 2,038 பேர் பலி .!

உலகம் முழுவதும் சமீப காலமாக பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு தீவிர வானிலை காரணமாக சுமார் 2,038 பேர் மரணித்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இந்தியாவின் சுற்றுச்சூழல் 2020...

தேச நலனுக்கு எதிராக செயல்பட்டதாக ஐபிஎஸ் அதிகாரி மீது ஆந்திர அரசு நடவடிக்கை

ஆந்திராவில் தேச நலனுக்கு எதிராக செயல்பட்டதாக டிஜிபி அந்தஸ்துக்கு இணையான மூத்த ஐபிஎஸ் அதிகாரியை அம்மாநில அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. 1989ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ஏ.பி.வெங்கடேஸ்வரா ராவ், தனது மகனின் நிறுவனத்துக்கு இஸ்ரேலை சேர்ந்த பாதுகாப்பு உற்பத்தி நிறுவனத்தின்...