​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் மழை

கஜா புயல் ஆடிய கோரத் தாண்டவத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில்,  பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கஜா புயலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மீட்புப்பணிகள் இன்னும்...

கஜா புயல் தாக்குதலுக்கு ஆளான நாகை மாவட்டத்தில் பெரும் பாதிப்பு

கஜா புயல் தாக்குதலுக்கு ஆளான நாகை மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நாசமாகியுள்ளன. மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் மற்றும் எண்ணற்ற மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடிய நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு, புஷ்பவனம்,...

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பகுதிகளில் கஜா புயல் ருத்ரதாண்டவம்..!

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கஜா புயலின் ருத்ரதாண்டவத்தால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.  வீடு இடிந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான தென்னை, வாழை மரங்கள் முறிந்து நாசமடைந்துள்ளன.  தஞ்சாவூர் மாவட்டத்தின் வடக்கும், கிழக்குப் பகுதிகளிலும், தப்பிக்க, பட்டுக்கோட்டை,...

பட்டுக்கோட்டையில் கஜா புயல் பாதிப்பால் 4 பேர் பலி

தஞ்சாவூரில் கஜா புயலின் ருத்ரதாண்டவத்தால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. பட்டுக்கோட்டையில் வீடு இடிந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தஞ்சை முழுவதும் நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 7 மணி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த...

அடிப்படை வசதி வேண்டி 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் மக்கள்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருவதாகக் கூறும் கிராம மக்கள், அதிகாரிகள் தங்கள் குறைகளை கண்டுகொள்வதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.  திருக்கோவிலூர் அடுத்த மொகலார் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்....

ஒரே அடி, வீழ்ந்தார் நடிகை ராக்கி சவந்த்..! மல்யுத்தத்தில் பல்பு

மல்யுத்த போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்த இந்தி நடிகை ராக்கி சவந்த், மல்யுத்த வீராங்கனையுடன் சண்டையிட்டு முதுகெலும்பை உடைத்துக் கொண்ட சம்பவம் பஞ்சாபில் அரங்கேறி இருக்கிறது. இந்தி திரை உலகில் எப்போதும் சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கும் கவர்ச்சி நடிகை ராக்கி சவந்த்...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கோலாகலம்

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் 4ஆம் நாளான நேற்று முருகனின் பக்தி பாடல்கள் பாடியும், ஆடியும் பக்தர்கள் வழிபட்டனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 8-ந் தேதி...

அந்த 7 பாதிரியார்கள்...! அமைச்சர் ஆடியோ விவகாரம்

அமைச்சர் ஜெயகுமார் தொடர்பான ஆடியோ வெளியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் தனது மகளுடன் சேர்ந்து இதுவரை 7 பாதிரியார்கள் மீது பொய்யான பாலியல் புகார் கூறி பணம் பறித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அவமானத்துக்கு அஞ்சும் நபர்களை மிரட்டி பணம்...

பத்திரிக்கையாளர் கசோக்கி கொல்லப்பட்டபோது பதிவான குரல் பதிவுகளை பல நாடுகளுக்குப் பகிர்ந்துள்ளதாக துருக்கி அதிபர் தகவல்

பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டபோது பதிவானதாகக் கருதப்படும் குரல் பதிவுகள் அடங்கிய டேப்களை அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பகிர்ந்துள்ளதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். சவுதி பட்டத்து இளவரசரை விமர்சித்து வந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையாளர் ஜமால்...

அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. நள்ளிரவில் உற்சவ அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அம்மனுக்கு பூசாரிகள் தாலாட்டுப் பாடல்கள் பாடியபோது ஏராளமான...