​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கிராமங்களுக்கு செல்வது கோவிலுக்குச் செல்வதை போல - ஸ்டாலின்

உள்ளூர் பிரச்சனைகளை அறிந்து கொள்ளவும், மக்களின் குறைகளை நேரடியாக அறிந்து கொள்ளவுமே திமுக கிராம சபைக்கூட்டங்களை நடத்துவதாக அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  தமிழகத்தில் உள்ள 12,617 ஊராட்சிகளும் கூட்டம் நடத்தி மக்களிடம் குறை கேட்க திமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக மாவட்டங்கள்...

பேஸ்புக்கில் முதலமைச்சரை அவதூறாக சித்தரித்து, பொய் தகவலை பரப்பிய லோகநாதன் கைது

சமூக வலைத்தளத்தில், முதலமைச்சர் மற்றும் போக்குவரத்துறை அமைச்சரை அவதூறாக சித்தரித்து, தவறான தகவல்களை பதிவிட்டதாகக் கூறி, கரூர் மாவட்டத்தில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். சின்னதாராபுரத்தை சேர்ந்த லோகநாதன், திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் அரவக்குறிச்சி தொகுதிக்கான நிர்வாகப் பொறுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்,...

நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வணிகப் பயிராகச் செங்காந்தள் பயிரிட்டு வருகின்றனர்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வணிகப் பயிராகச் செங்காந்தள் பயிரிட்டு வருகின்றனர்.  கண்வலிப்பூ, கார்த்திகைப் பூ என்கிற பெயர்களில் அழைக்கப்படும் செங்காந்தள் தமிழக அரசின் பூவாகும். செங்காந்தளின் கிழங்கு, தண்டு, பூ, விதை ஆகிய அனைத்துமே மருத்துவக் குணமிக்கவை....

உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் - எம்.ஆர். விஜயபாஸ்கர்

வார்டு வரையறைப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அனைத்து இடங்களிலும் அதிமுகவினர் வெற்றி பெறுவார்கள் என்றும் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கூறினார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தென்னிலை பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான பூமி...

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனைக் கொன்ற மனைவி

கரூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் திருக்கூர்ணம் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் கடந்த 23ஆம் தேதி இரவு கரூரை அடுத்த மணல்மேடு பகுதியில்...

நம்பி வந்தவர்களை நடுரோட்டில் விட்டுச் செல்வார் செந்தில்பாலாஜி: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

திமுகவில் இணைந்துள்ள செந்தில் பாலாஜி, தனியாக கட்சி துவங்கியுள்ள டிடிவி தினகரனையும், தன்னை நம்பி வந்தவர்களையும் நடுரோட்டில், விட்டுவிட்டுச் சென்றுவிட்டதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டியில், அமமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில்...

கரூர் மாவட்ட பொறுப்பாளர் தூக்கப்பட்ட நிலைக்குச் சென்றாரா? அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி

கரூர் மாவட்ட பொறுப்பாளர் தூக்கப்பட்ட நிலைக்குச் சென்றாரா? என்பது தெரியவில்லை என, அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வினவியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அமமுகவின் எழுச்சியை தடுக்கவும், முன்னேற்றத்தை முடக்கவும், துரோகிகள் மற்றும் எதிரிகளின் முயற்சிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்...

அரவக்குறிச்சியில் மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர். அரவக்குறிச்சி ஒன்றியத்தில் மதிமுகவின் செயலாளராக இருந்தவர் கோ. கலையரசன். 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளராக இவர் களமிறக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது இவர் தலைமையில்...

தகுதி நீக்கம்செய்யப்பட்ட 18 பேரும் அதிமுக-வில் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது வரவேற்கத்தக்கது - தம்பிதுரை

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் தற்போது எம்.எல்.ஏ.க்கள் கிடையாது என்றும், அவர்களுக்கு கட்சியில் சேர அழைப்பு விடுத்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து மனுக்களை பெற்ற...

ஆட்சியை கலைக்க வேண்டுமென நினைத்த துரோகிகளுக்கு சவுக்கடி - M.R.விஜயபாஸ்கர்

18 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஆட்சியை கலைக்க வேண்டும் என திட்டமிட்டு இருந்த துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த...