​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசு பங்களாக்களை காலி செய்யாத முன்னாள் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு பரிசீலனை

அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யாத 82 முன்னாள் எம்.பி.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மக்களவை கலைக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள், அந்த மக்களவையில் பதவி வகித்த எம்.பி.க்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட...

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஏற்க தெலுங்கானா அரசு மறுப்பு

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த முடியாது என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் நேற்று இதனை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்தார். கடுமையான அபராதம் விதித்து பொதுமக்களை துன்புறுத்தும் நோக்கம் தமது அரசுக்கு இல்லை என்று ராவ் தெரிவித்தார்....

அரசியலில் இருப்பவர்கள் மக்களை குழப்பும் செய்திகளை பரப்ப வேண்டாம் - அமைச்சர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்ட சில மாறுதல்களை செய்த பின்னரே உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் தமிழக அரசு இணைந்துள்ளதாகவும் இங்கு ஏற்கனவே நடைமுறையிலுள்ள பொதுவிநியோகத் திட்டத்துக்கு அதனால் பங்கம் வராது என்றும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளத்தில்...

பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க குழு - அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். ஆல் மீடியா பிரஸ் கிளப் ஆஃப் தமிழ்நாடுவின் 9ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை, ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடைபெற்றது....

ஜம்மு காஷ்மீரை பிரகாசிக்க செய்ய வேண்டும் என மோடி அறிவுறுத்தினார் - ஆளுநர் சத்யபால் மாலிக்

ஜம்மு காஷ்மீர் ஆளுநராகத் தான் பதவியேற்றபோது, அந்த மாநிலத்தை பிரகாசிக்க செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக, ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும், மாநிலம் சிறப்பான வளர்ச்சி அடைந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் எல்லைத் தாண்டி இங்கு...

நாட்டில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது: வேலைக்கான தகுதி தான் இல்லை - மத்திய இணை அமைச்சர் பேச்சால் சர்ச்சை

நாட்டில் வேலை வாய்ப்புகள் கொட்டி கிடப்பதாகவும், அதனை பெறும் தகுதி திறன் தான் வேலை தேடுபவர்களிடம் இல்லை எனவும் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார சரிவு மற்றும் வேலை வாய்ப்பு இன்மை உள்ளிட்ட காரணங்களால் நாட்டில்...

பள்ளிக்குள் புகுந்த மழைநீர் - இரவு முழுவதும் சிக்கிதவித்த மாணவர்கள், ஆசிரியர்கள்

ராஜஸ்தானில் அரசு பள்ளிக்குள் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்து வெளியேற முடியாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் இரவு முழுவதும் வகுப்பறையிலேயே சிக்கித்தவித்தனர். ராஜஸ்தானில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள  நீர் நிலைகள் நிரம்பி, எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்,...

மழை நீர் சேமிப்பு போன்று, மரம் வளர்ப்பதையும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் - முதலமைச்சர்

மழை நீர் சேமிப்பு திட்டம் போல, மரம் வளர்க்கும் திட்டத்தை மக்கள் நல இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.  சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் ஈஷா அறக்கட்டளையின் பசுமை கரங்கள் இயக்கம் சார்பில் காவேரி...

இப்படியும் ஒரு பேருந்து நடத்துநர் !

கோவையைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துனர் ஒருவர், பயணிகளை கனிவுடன் வரவேற்று, பயணக்கட்டணம், பேருந்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்து, அவர்களது பயணத்தை இனிமையாக்கி கவனம் பெற்று வருகிறார்.  பேருந்து நடத்துனர்கள், குறிப்பாக அரசுப் பேருந்து நடத்துனர்கள் மற்றும் பயணிகளுக்கு...

ஒகேனக்கல் உபரி தண்ணீரை தர்மபுரிக்கு பயன்படுத்த ஆய்வு -அமைச்சர்

ஒகேனக்கல்லில் அதிகப்படியாக தண்ணீர் செல்லும் காலங்களில் அதனை தர்மபுரி மாவட்டத்துக்கு பயன்படுத்துவதற்கான பணிகள் நடைபெறுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் தெரிவித்துள்ளார். தர்மபுரியில் பேரறிஞர் அண்னாவின் பிறந்த நாளையொட்டி, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அமைச்சர் கேபி அன்பழகன் ஊர்வலமாகச்சென்று நான்கு...