​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தருமபுரியில் தடயங்களை சேகரிப்பது குறித்து காவலர்களுக்கு பயிற்சி

தருமபுரியில் குற்ற வழக்குகளில் தடயங்களை சேகரிப்பது குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் காவல்துறையில் புதிதாக பணியில் சேர்ந்துள்ள 300 பயிற்சிக் காவலர்களுக்கு, கொலை வழக்கில் தடயங்களை சேகரிப்பது குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஒரு குற்ற சம்பவம்...

புதுச்சேரியில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை

புதுச்சேரியில் பட்டப்பகலில் இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். திலாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த  ஜாக்கி என்ற சரவணன், வெள்ளிக்கிழமை காலை தனது மோட்டார் சைக்கிளில் வழுதாவூர் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது 3 இருசக்கர வாகனங்களில்...

அடுத்த மாதத்துக்குள் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய 4,500 தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படாமல் உள்ள 4 ஆயிரத்து 500 தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அடுத்த மாதத்துக்குள் கட்டண நிர்ணயம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  2017 - 18-ஆம் கல்வியாண்டில் நீதிபதி சிங்காரவேலன் கமிட்டி நிர்ணய அடிப்படையில் தனியார் மெட்ரிகுலேஷன்...

புதிய மணல் குவாரிகள் திறக்கும் அரசின் முடிவுக்கு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்பு

புதிதாக மணல் குவாரிகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்  நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ்,...

தற்கொலைக்கு முயன்ற காவலர்கள் இருவருக்கும் ஜாமீன்

சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஆயுதப் படைக் காவலர்கள் இருவரையும் எழும்பூர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது.  தேனியைச் சேர்ந்த ஆயுதப் படைக் காவலர்களான கணேஷ், ரகு ஆகியோர் பணியிடமாற்றம் தொடர்பாக உயர் அதிகாரிகள் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு...

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு காங்கிரஸ் நோட்டீஸ்

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி வெளியேறியது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர,...

கோடையில் கண்களை அடிக்கடி தண்ணீரால் கழுவ வேண்டும் - கண் மருத்துவமனை இயக்குநர்

கோடை வெப்பத்தில் இருந்து கண்களைக் காக்கக் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை கண்களைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் எனக் கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கோடைக்காலத்தில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பது குறித்துச் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் இயக்குநர் மகேஸ்வரி செய்தியாளர்களிடம்...

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு நிர்ணயித்ததைவிட அதிக விலை - சிலிண்டர் ஏற்றிவந்த லாரி சிறைபிடிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு நிர்ணயித்ததை விடக் கூடுதல் பணம் பெறுவதைக் கண்டித்துப் பொதுமக்கள் லாரியைச் சிறைபிடித்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அக்ராபாளையத்தில் பாரத்கேஸ் முகமையினர் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு நிர்ணயித்த விலையை விட...

சிலிண்டர் எரிவாயு கசிந்து தீப்பற்றியதில் பெண் ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை கொருக்குப்பேட்டையில் சமையல் சிலிண்டர் எரிவாயு கசிந்து தீப்பற்றியதில் பெண் ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொருக்குப்பேட்டை காமராஜர் தெருவைச் சேர்ந்த எல்சா சமையல் செய்வதற்காக ஸ்டவ்வை பற்றவைத்திருக்கிறார். அப்போது சமயல் எரிவாயுக்கசிந்து அறை முழுவதும் நிரம்பி இருந்ததனால் வெடித்து தீப்பற்றியது....

மத்திய அரசு பரிந்துரைக்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஒன்றுபட்டு போராட கர்நாடக முதலமைச்சர் சீதாராமையா அழைப்பு

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகையைப் பின்பற்றுவது குறித்த மத்திய அரசு பரிந்துரைக்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஒன்றுபட்டு போராட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை முறையாக செயல்படுத்தும் மாநிலங்களில் மக்களவைத்...