​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கன்னியாகுமரி அருகே 9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தந்தை கைது

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 9ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் தரித்த விவகாரத்தில், அச்சிறுமியின் தந்தையை போலிசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்....

ரூ. 600 திருடியதாக ஆசிரியை திட்டியதால், 7ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே 600 ரூபாயை திருடியதாக ஆசிரியை திட்டியதால், 7ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரிசிபாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது இரண்டாவது மகள் வசந்தி, அதே ஊரில் உள்ள...

பாரத் பந்தால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பாதிப்பு

பாரத் பந்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத நிலையில், ஒரு சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆட்டோக்களை இயக்காததால், பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். அண்டை மாநிலமான கேரளாவில்...

படிக்கட்டில் பயணித்த மாணவருக்கு சரமாரி அடி..! அரசு பேருந்து நடத்துனர் ஆவேசம்

அரசு பேருந்து ஒன்றில் சொல்பேச்சு கேட்காமல் படிக்கட்டில் பயணம் செய்த மாணவரை, நடத்துனர் ஒருவர் அடித்து உதைத்த சம்பவம்  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்  நடந்துள்ளது  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து செங்குன்றத்திற்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றது. அப்போது, அரசு பள்ளியில் 12...

ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை - செங்கோட்டையன்

மாணவர்களுக்கு வழங்கப்படுவதுபோல், ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தருமபுரி இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஆசிரியர் தின சிறப்பு மலர் வெளியீட்டு...

அடுத்த ஆண்டு முதல் விலை இல்லா செருப்புகளுக்கு பதில் காலணிகள்(ஷூ) வழங்கப்படும் - செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு அடுத்த ஆண்டு முதல் விலை இல்லா செருப்புகளுக்கு பதில் காலணிகள்(ஷூ) வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழக அரசு சார்பில்  திருநெல்வேலி மாவட்டத்தில் பாவூர்ச்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நீட் மற்றும்...

வேலூர் அருகே 11ஆம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

வேலூர் அருகே ஆசிரியர்கள் அடித்ததாக கூறி  மாணவன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, பள்ளிக்குச் சென்ற உறவினர்கள் ஆசிரியர் ஒருவரை அடித்து உதைத்தனர். வேலூர் மாவட்டம் பொய்கை கிராமத்தைச் சேர்ந்த அருண்பிரசாத், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து...

ஆரம்பக்கல்வி முதல் பட்டமேற்படிப்பு வரை இலவசமாக அளிக்க உ.பி அரசு முடிவு

அரசு கல்வி நிறுவனங்களில் மழலையர் கல்வி முதல் பட்ட மேல்படிப்பு வரை இலவசமாக அளிப்பதற்கு உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டு வருவதாக அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார். மகாத்மா ஜோதிபா ப்யூல் ரோகில்காந்த் பல்கலை பட்டமளிப்பு விழாவில் (Mahatma Jyotiba Phule...

பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து பிறமொழி பாடபுத்தகங்கள் வழங்கப்படும் - தமிழக அரசு

பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து பிறமொழி பாடபுத்தகங்கள் வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு தரப்பு உறுதியளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ் தவிர மலையாளம், சமஸ்கிருதம்,ஜெர்மன் உள்ளிட்ட பிற மொழி பாடங்களும்...

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அடுத்த வெள்ளியூரில் உள்ள அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேசிய அவர், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை...