​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகளை நட நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டத்துக்கு 198 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தாநாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள்...

புதிய மோட்டார் வாகன சட்டம் - நீதிமன்றத்தில் வசூலிக்கப்படும் அபராத தொகை

மோட்டார் வாகன சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், உயர்த்தப்பட்ட அபராத தொகை நீதிமன்றத்தில் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தொடரின்போது, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத்...

கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக நீடிப்பு

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பெண் ஊராட்சி செயலாளர்களுக்கு மகப்பேறு கால விடுப்பை ஒன்பது மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பெண் ஊழியர்களுக்கு உள்ளது போன்று 180 நாள்களில் இருந்து 270 நாள்களாக உயர்த்தப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான...

300 ஊராட்சி மன்றங்களுக்கு புதிய அலுவலக கட்டிடங்கள் கட்ட அரசாணை வெளியீடு

ஊரகப்பகுதிகளில், பழுதடைந்த நிலையில் உள்ள 300 புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்களுக்கு பதிலாக, புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டசபையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்ததன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், கிராம பஞ்சாயத்துகள்,...

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக் கட்டணத்தை ரத்து செய்து அரசாணை வெளியீடு

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி நடைமுறையில் உள்ளது. இந்த வகுப்புகளுக்கு இதுவரை கல்விக் கட்டணம்...

கொப்பரைக் தேங்காய்களுக்கான அடிப்படை ஆதார விலை நிர்ணயம்

கொப்பரைக் தேங்காய்களுக்கான அடிப்படை ஆதார விலையாக கிலோவுக்கு 90 முதல் 95 ரூபாய் வரை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்பட 21 மாவட்டங்களில் சுமார் 4.36 லட்சம் ஹெக்டேரில் தென்னை...

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  மத்திய அரசின், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட மசோதா கடந்த 2016-ஆம் ஆண்டு இறுதி செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து திரையரங்குகள், ஓட்டல்கள், கடைகள்,...

உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிகளுக்கான வழிமுறைகள் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து, மாநில தேர்தல் ஆணையம் அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில், தீவிரம் காட்டி வரும் மாநில தேர்தல் ஆணையம், இதற்கான வாக்காளர் பட்டியல் குறித்து கடந்த வாரம் அரசாணை...

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. வாக்குச்சாவடி விவரங்களை தயாரித்தல், வாக்காளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட, உள்ளாட்சி தேர்தலுக்கான தயாரிப்பு பணிகள் தொடர்பாக, தமிழக அரசின் அரசிதழில் அரசாணை...

பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வழக்கை சி.பி.ஐ. முறைப்படி ஏற்கும் வரை, சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடர்ந்து நடைபெறும். பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கு, காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட...