​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.  இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த...

ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு விழா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச்சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொள்கின்றனர். ஏற்கனவே...

விவசாயி நெல் ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதி - அமைச்சர்கள் 3 பேர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்

சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயற்கை விவசாயி நெல் ஜெயராமனை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் சந்தித்து நலம் தெரிவித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன். தற்போது உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை...

10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி? - பா.ஜ.கவிற்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்வது குறித்த கேள்விக்கு ரஜினி பதில் கேள்வி

பா.ஜ.கவிற்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்வது குறித்த கேள்விக்கு, ஒருவருக்கு எதிராக பத்து பேர் ஒன்று சேர்ந்தால் யார் பலசாலி என்று ரஜினி எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பா.ஜ.கவை ஆபத்தான கட்சி...

கஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது : இந்திய வானிலை மையம்

கஜா புயலின் காரணமாக, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 கடலோர மாவட்டங்களில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் பகல் 2  மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து சுமார் 690 கிலோ...

கடலூர்-பாம்பன் இடையே நாளைமறுநாள் கஜா புயல் கரையைக் கடக்கும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நாளைமறுநாள் பாம்பன்- கடலூர் இடையே கரையைக் கடக்கும் என்பதால், முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வங்க கடலில் உருவாகி உள்ள கஜா  புயல்  இன்று அதிகாலை நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கே 780 கிலோ மீட்டர் தூரத்திலும், நாகைக்கு கிழக்கு-...

கஜா புயல் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற  ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,  செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, சுகாதாரத்துறை அமைச்சர் ...

பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அனந்த்குமார் காலமானார்...

மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அனந்த்குமார் காலமானார். அவருக்கு வயது 59. மத்திய அமைச்சர் அனந்தகுமாருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற பின் உடல்நலம் சீரானது. இந்நிலையில், மீண்டும் உடல்நலக்குறைவு...

தமிழகத்தில் புதிதாக 1.97 கோடி ஸ்மார்ட் கார்டுகள் - அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் புதிதாக ஒரு கோடியே 97 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டிருப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி...