​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீனாவுடன் போர் தொடுத்தால் தோற்றுப்போக நேரிடும் - அமெரிக்க நாடாளுமன்ற ஆணையம் எச்சரிக்கை

தற்போதைய சூழலில், சீனாவோடு, போர் தொடுத்தால், அமெரிக்கா தோற்றுப்போக நேரிடும் என,  அமெரிக்க நாடாளுமன்ற பாதுகாப்பு ஆய்வு ஆணையம், டிரம்ப் நிர்வாகத்தை எச்சரித்திருக்கிறது.  அமெரிக்க முப்படைகளின் பலம் குறித்து ஆய்வு செய்ய ஆணையம் ஒன்றை, அமெரிக்க நாடாளுமன்றம் நியமனம் செய்தது. இந்த ஆணையம்,...

அமெரிக்காவிலிருந்து கூடுதல் எண்ணெய், எரிவாயு இறக்குமதி - சிங்கப்பூர் மாநாட்டுக்கிடையே இந்தியா அறிவிப்பு

அமெரிக்காவிடம் இருந்து கூடுதலாக எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கோகலே, அமெரிக்காவுடனான வணிகத்தை விரிவுபடுத்தும் வகையில் கூடுதல் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக...

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் - பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூரில் சந்திப்பு

இந்தியாவில்  ராணுவ தளவாட தொழிற்சாலைகளை அமைக்க அமெரிக்கா முன்வர வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.  சிங்கப்பூரில் நடைபெறும் இந்தியா - ஆசியான் மாநாடு, கிழக்கு ஆசிய மாநாடு, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றுள்ளார். சிங்கப்பூர்...

கலிஃபோர்னியா காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் கலிஃபோர்னியா காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலிஃபோர்னியாவின் வடக்கே, பியூட் கவுண்ட்டி என்ற இடத்தில் கடந்த வாரத்தில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதேபோல் தெற்கே, தவுசண்ட் ஓக்ஸ் மற்றும் சிமி வேலி ஆகிய இரு...

அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரை நீக்க மெலானியா நிர்பந்தம்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரை பணியில் இருந்து நீக்குமாறு, அதிபர் டிரம்புக்கு, அவரது மனைவி மெலானியா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மிரா ரிக்கார்டெல் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ஆப்பிரிக்கா சென்றிருந்தபோது,...

ஜூராஸிக் காலத்தில் வாழ்ந்த டைனோசர்கள் எலும்புக் கூடு கண்டுபிடிப்பு

ஜூராஸிக் காலத்தில் வாழ்ந்த 2 டைனோசர்களின் முழு எலும்புக் கூடுகள் பிரான்ஸ் நாட்டில் ஏலம் விடப்பட உள்ளன. 4 மீட்டர் நீளம் கொண்ட கேம்ப்டோசாரஸ் மற்றும் அல்லோசாரஸ் ((Camptosaurus and an Allosaurus)) வகையைச் சேர்ந்த டைனோசர்களின் எலும்புக் கூடுகள் அமெரிக்காவின்...

மோடி பிரதமராக யார் காரணம் என சசி தரூர் கேள்வி

விண்வெளித் திட்டங்கள், ஐ.ஐ.டி.க்கள் போன்றவற்றை உருவாக்கியதும், அமெரிக்காவின் பிரபல கணினி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தந்ததும் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார். தேநீர் கடை நடத்திய...

பிளிப்கார்ட் நிறுவன சி.இ.ஓ பின்னி பன்சால் ராஜினாமா

பிளிப்கார்ட்((Flipkart)) நிறுவன தலைமை செயல் அதிகாரி பின்னி பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அமேசான் நிறுவனத்தின் பணியாற்றிய பின்னி பன்சால்((Binny Bansal)), சச்சின் பன்சாலோடு((Sachin Bansal)) இணைந்து, 2007ஆம் ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்டின் 77...

கலிஃபோர்னியா காட்டுத் தீயில் 300 படத்தின் நாயகன் வீடு நாசம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா காட்டுத் தீயில் எரிந்து சாம்பலான தனது வீட்டின் நிலையை 300 பருத்திவீரர்கள் படத்தின் நாயகன் ஜெரார்டு பட்லர் ((Gerard butler)) சோகத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார். கலிஃபோர்னியாவின் வடக்கிலும், தெற்கிலும் பற்றி எரியும் காட்டு தீயில் பொதுமக்கள் மட்டுமல்லாது ஹாலிவுட்...

சான் டியகோ உயிரியல் பூங்காவில் சுற்றித் திரியும் குட்டி யானைகள்

அமெரிக்காவின் சான் டியகோ உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு யானைக் குட்டிகள் ஒன்றையொன்று முட்டியும் மோதியும் விளையாடிச் சுற்றித் திரிந்து பார்வையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்து வருகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தின் சாண் டியகோ உயிரியல் பூங்காவில் மொத்தம் 14யானைகள் உள்ளன. இவற்றில் 4...