​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்க அதிபருக்கு ஹூஸ்டன் புகைப்படத்தை நினைவுப் பரிசாக வழங்கிய பிரதமர் மோடி

அமெரிக்காவில் நடந்த ஹவுடி மோடி நிகழ்வின்போது இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை பிரதமர் மோடி அமெரிக்க அதிபருக்கு பரிசளித்தார். ஐ.நா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க சென்ற பிரதமர் மோடி, முன்னதாக ஹூஸ்டன் நகரில் அமெரிக்கா வாழ் இந்தியர்களை சந்தித்து உரையாற்றினார். பல ஆயிரக்கணக்கான...

காஷ்மீர் விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் மீண்டும் அறிவிப்பு

ஹூஸ்டன் உரையில் பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவுப் போக்கு குறித்து பிரதமர் மோடி மிகக் கடுமையாக பேசியதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என மீண்டும் கூறியுள்ளார். நியூயார்க் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்பும், பாகிஸ்தான்...

வெள்ளை மாளிகையில் ஒரு உண்மையான நண்பரை இந்தியா பெற்றிருக்கிறது -பிரதமர் மோடி

"இந்த முறை டிரம்ப் ஆட்சி" என பொருள்படும், "அப்கி பார் டிரம்ப் சர்க்கார்" என்ற முழக்கம் வலிமையாகவும், தெளிவாகவும் கேட்பதாகவும் ஹூஸ்டன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார். இதன் மூலம், டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக வருவதற்கு மோடி ஆதரவு தெரிவித்துள்ளதாகக்...

மோடி நலமா நிகழ்ச்சி - விழாக் கோலம் பூண்டது ஹுஸ்டன்

அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் மோடி நலமா நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமைந்தது. இந்தியாவின் பன்முக கலாசாரம், அடையாளம் ஆகியவற்றின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த கலைநிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. திரும்பிய பக்கமெல்லாம் இந்தியா வாழ்க, பிரதமர் மோடி வாழ்க என்ற...

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 50 ஆயிரம் இந்தியர்கள் திரளும் நிகழ்ச்சியில் மோடி - ட்ரம்ப் கூட்டாக பங்கேற்பு

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 50 ஆயிரம் இந்தியர்கள் திரளும் மாபெரும் சந்திப்பு நிகழ்ச்சியில் மோடி - ட்ரம்ப் கூட்டாக பங்கேற்பதால் உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.நா. பொது சபையின் 74ஆவது கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர...

பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள்? டிரம்ப் சூசகம்

வரும் 22ஆம் தேதி ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடியுடன் பங்கேற்கும் கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, வரும் 22ஆம் தேதி...

இருமுறை நிகழவிருக்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் சந்திப்பு

பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் அந்நாட்டில் அடுத்த வாரத்தில் இருமுறை சந்திக்கின்றனர். பிரதமராக இரண்டாவது முறை பொறுப்பேற்ற பிறகு, மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை ஏற்கெனவே இருமுறை சந்தித்துப் பேசியுள்ளார். ஜி20 உச்சி மாநாட்டின் போது ஜப்பானிலும், ஜி7 உச்சி மாநாட்டின்போது...

தனது அமெரிக்க உரையில் மக்களும் பங்களிப்பு வழங்கலாம் - மோடி

அமெரிக்காவில் இந்தியர்களிடையே ஆற்றும் உரையில் என்னென்ன பேசலாம் ?என ஆலோசனை வழங்குமாறு மக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். வரும் 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அமெரிக்க அதிபர்...

வடகொரியா மீண்டும் 2 ஏவுகணைகள் சோதனை

வடகொரியா இன்று காலை 2 குறுந்தொலைவு ஏவுகணைகளை சோதனை நடத்தியுள்ளது. தெற்கு பியாங்கன்  மாகாணத்தில் இருந்து கிழக்குப் பகுதியை நோக்கி ஏவுகணைகளை செலுத்தி அந்நாடு பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணைகள், 330 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாய்ந்து சென்றதாக தென்கொரிய ராணுவமும் குறிப்பிட்டுள்ளது.வடகொரியா...

இந்தியா-பாக். உறவில் பதற்றம் தணிந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

2 வாரங்களுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடும்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் தணிந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இரு நாடுகளும் கேட்டுக்கொண்டால் மத்தியஸ்தத்திற்கு அமெரிக்கா உதவத் தயார் என அவர் மீண்டும் தெரிவித்துள்ளார். ஜி-7 உச்சி மாநாட்டின்போது, பிரான்சில் கடந்த...