​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தினால் ஆக்ரமிப்பு காஷ்மீர் பற்றியும் பேசுவோம்

பாகிஸ்தானுடன் காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால் அது காஷ்மீரைப் பற்றியதாக மட்டும் இருக்காது. ஆக்ரமிப்பு காஷ்மீரைப் பற்றியும் சேர்த்துதான் இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்சினையில் மோடி கேட்டுக் கொண்டதால் மத்தியஸ்தம் செய்ய விருப்பம் தெரிவித்த...

காவிரி விவகாரத்தில் பேரவையில் அனல்பறக்கும் விவாதம்...

காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதில் திமுக, அதிமுகவின் பங்கு பற்றி சட்டப்பேரவையில் அனல்பறக்கும் விவாதம் நடைபெற்றது. 17 ஆண்டுகள் மத்தியில் அதிகாரத்தில் இருந்தும், தமிழகத்தின் எந்த ஒரு முக்கிய பிரச்னைகளிலும் தீர்வு காண தவறிவிட்டதாக, திமுகவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாடினார். சட்டப்பேரவையில், பொதுத்துறை...

நம்பிக்கை வாக்கெடுப்பு: குமாரசாமிக்கு ஆளுநர் மீண்டும் கெடு

உணவு இடைவேளைக்காக கர்நாடக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு, பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் தொடங்கியது. நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது சித்தராமையா பேசியபோது, பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் விதித்த கெடு மதியம் ஒன்றரை மணியுடன் நிறைவடைந்துவிட்டதால்,...

தப்புமா குமாரசாமி அரசு?

இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் பெரும்பான்மைய நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதம் செய்வதைக் கண்டித்து, பாஜக எம்.எல்.ஏக்கள் அனைவரும் எடியூரப்பா தலைமையில் சட்டசபையில் உண்டு, உறங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கர்நாடக சட்டப்பேரவையில்...

இன்றே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கர்நாடக சபாநாயகருக்கு அம்மாநில ஆளுநர் அறிவுறுத்தல்

கர்நாடக சட்டப்பேரவையில், முதலமைச்சர் கொண்டுவந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்றே நிறைவேற்ற வேண்டும், சபாநாயகரை, அம்மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.  கர்நாடக ஆளும் காங்கிரஸ் - மதச்சார்ப்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு எதிராக, இருகட்சிகளையும் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதில், காங்கிரஸ்...

என்.ஐ.ஏக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்த மசோதா

தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்கும் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் தீவிரவாதிகளை விசாரிக்கும் அதிகாரம் என்.ஐ.ஏக்கு வழங்கப்படும். உள்ளூர் காவல்துறையின் விசாரணைக்கும் ஒப்புதலுக்கும் காத்திருக்காமல் உள்நாட்டில் தீவிரவாதிகளின் சொத்துகளை முடக்கவும் இச்சட்டம் என்.ஐ.ஏக்கு அதிகாரம்...

திமுகவையும், கருணாநிதியையும் விமர்சித்து செந்தில்பாலாஜி பேசிய கருத்தை சுட்டிகாட்டியதால் கடும் அமளி

திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி அதிமுகவில் இருந்தபோது திமுகவையும், கருணாநிதியையும் விமர்சித்து பேசிய கருத்துக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டி பேசியதால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. சட்டப்பேரவையில் போக்குவரத்துதுறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறையில் கடன் என்பது...

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் அஞ்சல் துறை தேர்வுகள் - மத்திய அரசு உறுதி

தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இனி மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. தபால் துறையில் ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும்...

குமாரசாமி அரசு தப்புமா?

கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் வியாழக்கிழமை  அன்று நடைபெறும் என சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார். பெரும்பான்மைக்கு 113 எம்.எல்.ஏ.க்கள் தேவையுள்ள நிலையில், தற்போது 100 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவே குமாரசாமிக்கு உள்ளது. கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற...

ஆந்திர சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரையின்போது அமளி - ஜெகன் மோகன் ரெட்டி ஆவேசம்

ஆந்திர சட்டப்பேரவையில் பேசிக் கொண்டிருந்த போது தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் குறுக்கிட்டதால் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆவேசம் ஆனார். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் பற்றி தவறான தகவல்களை அளித்ததாகக் கூறி, முதலமைச்சர் மீது தெலுங்குதேசம் கட்சியினர் உரிமை மீறல்...