​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காங்கிரஸ் எம்பிக்களின் அமளியால் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா தாக்கலாகவில்லை

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், நேற்று மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படாமல் தடுக்கப்பட்டு விட்டது. மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து அளிக்கும் இஸ்லாமியரின் முத்தலாக் முறையை சட்டவிரோதமாக அறிவிக்கும் மசோதா கடந்த...

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் அமளி

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இரு அவைகளும் கூடுவதற்கு முன்னர், நாடாளுமன்ற வளாகத்தில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சோனியா காந்தி, உள்ளிட்ட...

முத்தலாக் மசோதாவில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

முத்தலாக் மசோதாவில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முத்தலாக்குக்கு எதிரான முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஆனால் மாநிலங்களவையில் பெரும்பான்மையாக உள்ள எதிர்க்கட்சிகள் திருத்தம் செய்ய வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் மசோதா நிறைவேறாமல் உள்ளது....

எஸ்.சி., எஸ்.டி சட்ட விவகாரம்: ராகுல் - அமித் ஷா வார்த்தை போர்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்திற்கு, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா எதிர்வினையாற்றியிருக்கிறார். எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை திருத்தம் இன்றி நிறைவேற்ற வலியுறுத்தி,...

நாடாளுமன்றத்தை செயல்பட விடுங்கள் - எதிர்க்கட்சியினருக்கு மோடி கோரிக்கை

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளிகளால் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை என்றும், மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  2014 முதல் 17 வரையிலான காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய எம்பிகளுக்கு கௌரவமளிக்கும் விழா நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில்...

அசாம் தேசியக் குடிமக்கள் பதிவேடு விவகாரத்தால் மாநிலங்களவையில் அமளி

அசாம் தேசியக் குடிமக்கள் பதிவேடு தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் முதலில் இருமுறையும் பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை தொடங்கியதும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள், அசாம் விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்...

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருப்பது அசாமில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருப்பது அசாமில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக பாஜக அரசு பெயர்களை நீக்கியிருப்பதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டிய நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்தியாவிலேயே அசாம்...

அசாம் குடிமக்கள் வரைவு தேசிய பதிவேடு : 40 லட்சம் பெயர்கள் விடுபட்டன

அசாமில் குடிமக்களுக்கான வரைவு தேசிய பதிவேடு வெளியிடப்பட்ட விவகாரத்தில் சிலர் வேண்டுமென்றே தேவையற்ற அச்சத்தை பரப்புவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். வரைவுப் பட்டியலில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. அவர்கள் வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தை அணுகி தீர்வு பெறலாம் என்று...

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதில்

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை என்றும், இதற்கு ஒப்புக் கொண்டதே காங்கிரஸ் அரசுதான் என்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மக்களவையில் ராகுல்காந்தி பேச்சைத் தொடர்ந்து, ரஃபேல் ஒப்பந்தம் பற்றிய அவரது...

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான விவாதத்தில் ராகுல் ஆவேசம்

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று ஆவேசமாக பேசியபோது பெரும்  அமளி உருவானது. கூச்சல்-குழப்பத்திற்கு இடையே தமது பேச்சை முடித்த ராகுல்காந்தி, பிரதமர் மோடி அமர்ந்திருந்த இடத்திற்கே சென்ற  அவரை கட்டியணைத்து...