​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரயில் பணிகளின் போது சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரயில் பணிகளின் போது சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தண்டையார்பேட்டை  அப்போலோ மருத்துவமனை அருகே இரும்பு தடுப்புகள் அமைத்து  பூமிக்கு...

உலக விபத்து தடுப்பு தினத்தை முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக விபத்து தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் அப்போலோ மருத்துவமனை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது பள்ளி மாணவ - மாணவிகளுக்கு எல்.சி.டி. திரையில் விபத்துக்கள் குறித்த விழிப்புணர்வுக் காட்சிகள்...

2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற வீடியோவைக் கொண்டு அப்போலோ தீவிர சிகிச்சை மருத்துவரிடம் விசாரணை

ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற போது எடுக்கப்பட்ட வீடியோவைக் கொண்டு அப்போலோ தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. அப்போலோ மருத்துவரான ரேமண்ட் ஒருவரை பார்த்தே, அவருக்கு இருக்கும் நோய்கள் குறித்து கண்டறியும் நிபுணத்துவம் பெற்றவர் என்று...

அப்போலோ மருத்துவர்களே போதும் என ஜெயலலிதா கூறியதாக தகவல்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, வெளி மருத்துவமனை மருத்துவர்கள் தேவையில்லை என சொன்னதாக, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சத்தியமூர்த்தி சாட்சியம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை எழிலகத்தில் ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்போலோ மருத்துவமனை இதயநோய் மருத்துவர் சத்தியமூர்த்தி ஆஜராகி சாட்சியம் அளித்தார்....

அப்போலோ மருத்துவர்கள் 8 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

அப்போலோ மருத்துவர்கள் 8 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், ஓராண்டைக் கடந்தது. தற்போது வரை இந்த ஆணையத்தின் மூலம் 105 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அப்போலோ...

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ நிர்வாக அதிகாரி சிசிடிவி கேமரா காட்சி குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விசுவநாதன் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராகிய அவர், ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகள் குறித்து...

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விசுவநாதன் ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விசுவநாதன் ஆஜராகிப் பிரமாணப் பத்திரம் செய்தார்.  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகளை செப்டம்பர்...

ஜெயலலிதா சிகிச்சையின் போது பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் இல்லாத தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நாளை விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல்

ஜெயலலிதா சிகிச்சையின் போது பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் இல்லாதது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நாளை விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை ஒப்படைக்க ஆறுமுகசாமி ஆணையம் கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆனால் சி.சி.டி.வி....

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஜெயலலிதா உடலில் வெளிப்புற காயங்கள் ஏதுவும் இல்லை

போயஸ் கார்டனிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டபோது ஜெயலலிதா உடலில் வெளிப்புற காயங்கள் ஏதுவும் இல்லை என அப்போலோ மருத்துவர் சுப்பிரமணியம் வாக்குமூலம் அளித்ததாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் சுப்பிரமணியம், ஹெக்டே, ரவிக்குமார்,...

நோய்த் தொற்றினால் ஜெயலலிதாவுக்கு மரடைப்பு ஏற்படவில்லை - மருத்துவர் ராமசுப்பிரமணியம்

நோய்த் தொற்றினால் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்று அப்போலோ மருத்துவர் ராமசுப்பிரமணியம் தெரிவித்ததாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் ராமசுப்பிரமணியம் ஆஜரானார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் அரவிந்தன், ஜெயலலிதா மருத்துவமனையில்...