​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மருத்துவமனையில் பெண்ணுக்கு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை

ஒடிஷா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் டார்ச் லைட் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட அவலம் அரங்கேறி உள்ளது. மயூர்பஞ்ச் மாவட்டத்தில் மின்தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்சாரம் தடைபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ரவுரான் என்ற இடத்தில்...

அமைச்சரவையை மாற்றி அமைத்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர்

கோவா அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மனோகர் பாரிக்கர் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த ஃபிரான்சின்ஸ் டிசவுசா ((Francis D Souza)), அமெரிக்காவிலும் மின் துறை அமைச்சராக இருந்த பாண்டுரங் மட்கைகர் ((Pandurang Madkaikar)) மும்பையிலும் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

பச்சிளம் குழந்தைக்கு 6 மணி நேரம் போராடி சிக்கலான இருதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவக்குழு

கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் இருதயத்துக்குச் செல்லும் இரத்தக்குழாய் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். நெல்லை  மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பிறந்து ஒரு மாதமேயான ஆண் குழந்தைக்கு, மூச்சுத் திணறல் இருந்ததுடன் கை, கால்கள் நீல...

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2-ல் ஓய்வு பெற உள்ள நிலையில் அவரது தலைமையிலான அமர்வுகள்,8 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல்

அக்டோபர் 2ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற உள்ள நிலையில் அவரது தலைமையிலான அமர்வுகள், 8 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் வழக்கு, அயோத்தி வழக்கை 5 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை...

பள்ளிப்பேருந்தின் அவசரக்காலக் கதவு வழியே தவறி விழுந்த 4வயதுச் சிறுமி

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் காந்தி மெட்ரிக்குலேசன் பள்ளிப் பேருந்தின் அவசரக்காலக் கதவு வழியாக 4வயதுச் சிறுமி தவறி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழ்பெண்ணாத்தூர் அருகே நம்மியேந்தலைச்  சேர்ந்த கதிர்வேல் என்பவரின் 4 வயது மகள் லட்சியாவை மங்கலத்தில் உள்ள காந்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில்...

கருணாஸ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டம்

சென்னையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கருணாஸ் ஆதரவாளர்கள் சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரியை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் நேற்று கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நந்தனத்தில் கருணாஸ் ஆதரவாளர்கள்...

மண்டல கிராம வங்கிகளை ஒருங்கிணைக்க மத்திய அரசு திட்டம்

பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக மண்டல கிராம வங்கிகளையும் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளது. நாட்டில், மண்டல கிராம வங்கிகளின் எண்ணிக்கை தற்போது 56ஆக இருக்கும் நிலையில்,...

மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த பெண் குழந்தை மீட்பு

நாகை மாவட்டம் புதுப்பள்ளி பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கத் தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தையை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர். புதுப்பள்ளியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான கார்த்திக் என்பவரது இரண்டரை வயது பெண் குழந்தை சிவதர்ஷிணி, பக்கத்து வீட்டு தோட்டத்தில்...

கோவா முதலமைச்சராக மனோகர் பாரிக்கரே நீடிப்பார் : அமித்ஷா

கோவா முதலமைச்சராக மனோகர் பாரிக்கரே நீடிப்பார் என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய மனோகர் பாரிக்கர், தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணையத்தில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் அவருக்கு...

தஞ்சை அருகே மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

தஞ்சை அருகே மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதமடைந்தன. சென்னையில் இருந்து தஞ்சை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு மதுபானங்களை ஏற்றிய லாரி சென்றுகொண்டிருந்தது. தஞ்சை அருகில் உள்ள தண்டாங்கோரை என்ற...