​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வேகமாக சென்ற அரசுப் பேருந்து ஆட்டோவுடன் மோதிய விபத்தில் 23 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதியதுடன் அருகே இருந்த கிணற்றுக்குள் கவிழ்ந்த கோர விபத்தில் 23 பேர் பலியாகினர். நாசிக்கில் இருந்து கல்யாண் நோக்கி பயணிகளுடன் சென்ற அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று, மாலேகான்...

குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கம்

குறைந்த கட்டணத்தில், சாதாரண மக்களும் பயணிக்கும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் குளிர்சாதன பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே இயக்கப்படும் வால்வோ குளிர்சாதன பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் 28 ரூபாயாக உள்ள நிலையில், இந்தப் பேருந்துகளில் 15 ரூபாய்...

விமான கட்டணத்தை மிக குறைவாக வசூலிப்பது நல்லதல்ல- அமைச்சர் ஹர்தீப்சிங் புரி

போட்டி மனப்பான்மையில் விமான கட்டணத்தை சில நிறுவனங்கள் மிக குறைவாக வசூலிப்பது தொடர்ந்தால், மற்ற விமான நிறுவனங்கள் இழுத்து மூடப்படலாம் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் புரி எச்சரித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விமான நிறுவனங்கள் நலிவடைவதற்கு, குறைந்த...

ரயில் பயணிகள் கட்டணம் உயர்வு?

ரயில் பயணிகள் கட்டணம் 15 முதல் 20 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. ஆனால் சாலை சரக்குப் போக்குவரத்து கட்டணத்துக்கு நிகராக ரயில் சரக்கு போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை ரயில்வே நிர்வாகம்...

இருசக்கர வாகனத்தின் பின்னால் பயணிப்போருக்கும் ஹெல்மட் அவசியம்-கேரளா

கேரளாவில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்போரும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு விலக்கு அளிக்க...

போக்குவரத்து ஊழியர்களுக்கு அறிவித்தபடி போனஸ் வழங்கப்படும்

போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு அறிவித்தபடி தீபாவளி போனஸ் வியாழக்கிழமை முதல் வழங்கப்படும் என்றும் முன்னதாக புதன்கிழமை தீபாவளி முன்பணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர்,...

தெலுங்கானாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 48,000 போக்குவரத்து ஊழியர்கள் டிஸ்மிஸ்

தெலங்கானா மாநிலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவைப் போல போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது...

பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து கொடுத்தால் இலவச மெட்ரோ பயணம்

இத்தாலியில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொடுப்போருக்கு மெட்ரோவில் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பினை அந்நாட்டு போக்குவரத்து துறை வழங்கி வருகிறது. சுற்றுலா தலங்கள் நிறைந்த இத்தாலியில், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் நாள் கணக்கில் தெருக்களில் தேக்கப்படுவதை தவிர்க்க அந்நாட்டின் சுற்றுசூழல் துறை, போக்குவரத்து துறையுடன்...

உலகிலேயே பொதுப்போக்குவரத்தில் பயணத்துக்குப் பின் கட்டணம்

உலகிலேயே பொதுப் போக்குவரத்தில் பயணத்துக்குப் பின் கட்டணம் செலுத்தும் முறையை சுவிட்சர்லாந்து அறிமுகப்படுத்தவுள்ளது. CH டைரக்ட் என்ற நிறுவனம் ஆப் மூலம் பொதுப் போக்குவரத்தின்போது ஏறும் இடத்தையும், இறங்கும் இடத்தையும் ஆப்பில் பதிவிடும்படி கோருகிறது. இதைப் பதிவு செய்து பயணம் முடித்ததும்...