​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காரைக்கால் மீனவர்களை சிறைப்பிடித்த காசிமேடு மீனவர்கள்

அதிக திறன் கொண்ட என்ஜினை பயன்படுத்தி கடலில் மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்களை காசிமேடு மீனவர்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.  காரைக்கால் டி.ஆர் பட்டினத்தைச் சேர்ந்த சிங்கம் மாகாளி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்  10 மீனவர்கள் கடந்த 16 ம் தேதி...

எல்லைத் தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 4 பேர் விடுதலை

எல்லைத் தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 2 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த மாதம் 31ம் தேதி பொன்னழகு, சுகுமார், கணேசன், ஜாக்சன் ஆகிய 4 பேரும் மண்டபத்தில் இருந்து மீன் பிடிக்க...

மீன்களில் ரசாயனம் பூசப்படுவதாக வெளியாகும் தகவல் வதந்தி - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட விசைப்படகுகள் அணையும் தளத்தை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். காசிமேட்டில் மீனவர்கள் பயன் அடையும் வகையில் விசைப்படகுகள் ஒன்றுக்கொன்று மோதி சேதம் அடைவதைத் தவிர்க்கும் வகையில் அணையும் தளம்...

நடுக்கடலில் கவிழ்ந்த படகு - 4 பேர் உயிருடன் மீட்பு

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே, கடலில் மூழ்கிய படகிலிருந்து மாயமான மீனவர்கள் நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி மற்றும் நடராஜபுரம் பகுதிகளைச் சேர்ந்த 10 மீனவர்கள்,...

படகு நடுக்கடலில் மூழ்கியதில் - 8 பேர் மாயம்

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே, கடலில் மூழ்கிய படகிலிருந்து மாயமான எட்டு மீனவர்களில் நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி மற்றும் நடராஜபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 மீனவர்கள், புதிய படகு வாங்குவதற்கு கடந்த 29ம் தேதி கடல் வழியாக...

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து

நடுக்கடலில் மாயமான மீனவர்களை மீட்டுத்தரக்கோரி மீனவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  ராமேஸ்வரம் அருகே உள்ள நடராஜபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடலூரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி படகில் வந்து கொண்டிருந்தனர். மல்லிப்பட்டிணத்தில் இருந்து 15 நாட்டிக்கல் தூரத்தில் வந்த போது, திடீரென...

டன் கணக்கில் குவிக்கப்பட்டுள்ள இரண்டாம் தர மீன்கள்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் டன் கணக்கில் குவியும் 2ம் தர மீன்களை, யாரும் வாங்க முன்வராததால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன், அரசு தரப்பு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும், கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட 150 க்கும் மேற்பட்ட படகுகளுக்கு உரிய...

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கிய 11 கிராம விசைப்படகு மீனவர்கள்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால் பகுதியில் உள்ள மீன்பிடித்துறைமுகத்தின் முகத்துவாரத்தை அரசு தூர்வாரி, ஆழப்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். காரைக்கால் மீன்பிடித்துறைமுகம் தூர்வாரி 5 ஆண்டுகளான நிலையில், தற்போது முகத்துவாரம் தூர்ந்து...

3 அம்ச கோரிக்கைகளுடன் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிப்பது, கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத...