​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வேதபாறை அருகே நீர் தேக்கம் கட்ட பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நீர் தேக்கம் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வனப்பகுதிகளிலிருந்து காட்டாறு மூலம் வெளியேறும் மழை வெள்ளம் வேதபாறை ஓடை வழியாக பவானி ஆற்றில் கலக்கிறது. இந்த நிலையில் கள்ளிப்பட்டி,...

வயல்கள் தீயிட்டு எரிக்கப்படுவதால் படரும் மாசு

வட இந்தியாவில் விவசாயிகள் அறுவடை செய்யாத பயிர்களை வயல்களில் தீயிட்டுக் கொளுத்துகின்றனர். அறுவடை முடிந்த வயல்களிலும் எஞ்சிய பதர்கள் தீயிட்டு எரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக தலைநகர் டெல்லி மாசு மிகுந்த ஆரோக்கியமில்லாத நிலையை எட்டியுள்ளது. வயல்களுக்குத் தீவைக்க கூடாது என்று அரசு எச்சரித்துள்ள...

சிறுகிழங்கு நடவுப் பணியில் மும்முரம் காட்டி வரும் விவசாயிகள்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் சிறுகிழங்கு நடவுப் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சங்கரன்கோவில், நாயக்கர்பட்டி, கே.ஆலங்குளம், புதுக்குளம், செட்டிகுளம், வேப்பங்குளம், சாயமலை உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சிறுகிழங்கு பயிரிடப்படுகிறது. சைனீஸ் பொட்டேட்டோ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் சிறுகிழங்கு நல்ல மணமும்...

உதவித்தொகை பெற ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

விவசாயிகள் ஆறாயிரம் ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கு ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அதன்பிறகு பேசிய...

வறட்சி என ஒதுங்கவில்லை.. விவசாயத்தில் சாதித்த விவசாயி..!

இராமநாதபுரம் அருகே வறட்சி என அபயக்குரல் எழுப்பி விவசாயத்தை விட்டு ஒதுங்கி நிற்காமல், கடின உழைப்பு, சரியான திட்டமிடல் மூலம், தென்னை,மா, வாழை, காய்கறிகள், கீரை என இயற்கை விவசாயத்தில் அதிக மகசூல் செய்து அசத்திவருகிறார் விவசாயி ஒருவர். சொட்டு நீர்ப்பாசனம் மூலம்,...

விவசாய பணிக்கும் வந்தாச்சு வடமாநில இளைஞர்கள்

கரூர் மாவட்டத்தில் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் விவசாய வேலைகளுக்கும் வடமாநில இளைஞர்கள் வந்து விட்டனர். அவர்கள் குறைந்த ஊதியத்தில், விரைவாக, விவசாய பணிகளை மேற்கொள்வதாக நில உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தொழில்கள் நிறைந்த கரூர் மாவட்டத்தில் பேருந்துகளுக்கு கூண்டு கட்டுவது, ஜவுளி ஏற்றுமதி,...

தமிழகம் முழுவதும் பரவலாக மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. தொடர் மழை காரணமாக நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் அதிகாலையில் கனமழை பெய்தது. சென்னாவரம்,...

விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டத்தின்போது கரும்பு விவசாயிகள் போராட்டம்

திவாலான இரு சர்க்கரை ஆலைகள் நிலுவை வைத்துள்ள 100 கோடி ரூபாய் பாக்கியை பெற்றுதர வலியுறுத்தி, கரும்பு விவசாயிகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில், விவசாயிகள் குறைகேட்பு...

தண்ணீர் பிரச்சனையால் வெட்டிவேர் சாகுபடிக்கு மாறிய விவசாயிகள்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே, தண்ணீர் பிரச்சனையால் வெட்டிவேர் சாகுபடி செய்யும் விவசாயிகள், அவற்றை திருப்பதி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவிலுக்கு அனுப்பி வருவாய் ஈட்டுவதாக தெரிவித்துள்ளனர். சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை நிலவுகிறது. இதனால் நெல் சாகுபடிக்கு பதிலாக...

சீன பிளாஸ்டிக் பூக்களுக்கு தடைவிதிக்குமாறு மலர் விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், சீன பிளாஸ்டிக் பூக்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கக்கோரி, மலர் விவசாயிகள் ஒரு லட்சம் பூக்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரோஜா, ஜர்புரா, பிங்க் உள்ளிட்ட ஏராளமான பூக்களை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி...