​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடிகர் விஜயகுமார் வீட்டில், அத்துமீறி தங்கியிருந்ததாக வனிதா உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு

வீட்டைவிட்டு காலி செய்ய மறுத்ததாக பிரபல நடிகர் விஜயகுமார் அளித்த புகாரில், அவரது மகள் வனிதாவை வீட்டை விட்டு வெளியேற்றிய போலீசார், வீட்டிற்குள் அத்துமீறி தங்கி இருந்ததாக 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, 7 பேரைக் கைது செய்துள்ளனர். பிரபல...

தர்மத்தின் தலைவன் உள்ளிட்ட தமிழ்படங்களில் நடித்த கேப்டன் ராஜு 68வது வயதில் காலமானார்

தர்மத்தின் தலைவன் உள்ளிட்ட தமிழ்படங்களில் நடித்த மலையாள நடிகர் கேப்டன் ராஜூ தமது 68-வது வயதில் காலமானார். இவவர் நாடோடிக்கட்டு, ஒரு வடக்கன் வீரகதா உள்ளிட்ட பல மலையாள மொழிப் படங்களில் நடித்தவர். தமிழில், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, தர்மத்தின் தலைவன், சின்னப்பதாஸ்,...

பெங்காலி தொலைக்காட்சித் தொடர் நடிகை பாயல் சக்ரவர்த்தி மர்மமான முறையில் மரணம்

பெங்காலி தொலைக்காட்சித் தொடர் நடிகை பாயல் சக்ரவர்த்தி சிலிகுரியில் உள்ள ஓட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். பல்வேறு தொலைக்காட்சி நாடகத் தொடர் மற்றும் திரைப்படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்த பாயல் சக்ரவர்த்தி எனும் நடிகைக்கு சமீபத்தில் விவாகரத்தானது. அவருக்கு ஒரு மகன்...

பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமாரின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 95 வயதான அவர், நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில்  திலீப்குமார் ஒரு வாரகாலத்திற்கு சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று...

நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்

வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன், மன்னன், அமைதிப்படை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளவர் வெள்ளை சுப்பையா. கோவை மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சொந்த ஊராகக் கொண்ட வெள்ளை சுப்பையா, ஆரம்ப காலகட்டத்தில் ஏராளமான நாடகங்களில் நடித்திருக்கிறார். நாடகங்கள் தந்த...

உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் பட்டியலில் முதல் 10 இடத்தில் பாலிவுட் நடிகர்கள் அக்சய் குமார், சல்மான் கான்

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக அளவில் அதிக ஊதியம் பெறும் நடிகர்களுக்கான பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ஏழாவது இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் தொடங்கி இந்த ஆண்டு ஜூன் வரையிலான  நடிகர்களின் வருமானத்தை கொண்டு பட்டியலை ஃபோர்ப்ஸ் தயாரித்துள்ளது....

முற்போக்குவாதி நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் ஒருவர் கைது

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சச்சின் அந்துரேயை ஆகஸ்டு 26வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த முற்போக்குவாதி நரேந்திர தபோல்கர் 2013ஆம் ஆண்டு ஆகஸ்டு இருபதாம் நாள்...

பெற்றோர்கள் குழந்தைகளை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும் - நடிகர் விவேக் பேச்சு

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு, அவர்களது பெறோர் அவர்களை நெருக்கமாக கண்காணிக்காததும் காரணம் என நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் நிகழ்ச்சியில் பேசிய அவர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளையும் அவர்களது நடவடிக்கைகளை கண்காணிக்க...

கார் விபத்து கவனக்குறைவால் ஏற்பட்டது என விளக்கம்

அதிவேகத்தில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக நடிகர் விக்ரமின் மகன் கைது செய்யப்பட்டு பின் காவல்நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டார். கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  நடிகர் விக்ரமின் மகன் துருவ், தமது நண்பர்களுடன் சென்னை மந்தைவெளியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு அதிகாலை...

நடிகர் ரஜினிகாந்தோடு தன்னை ஒப்பிடுவது நியாயம் இல்லை - கமல்ஹாசன்

நடிகர் ரஜினிகாந்தோடு தன்னை ஒப்பிடுவது நியாயம் இல்லை என்றும், தாம் சந்தர்ப்பவாதி அல்ல என்றும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். PTI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். இந்தியா எப்போதும் போல் பன்முகத்தன்மை கொண்ட நாடாக...