​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தஞ்சை அருகே மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

தஞ்சை அருகே மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதமடைந்தன. சென்னையில் இருந்து தஞ்சை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு மதுபானங்களை ஏற்றிய லாரி சென்றுகொண்டிருந்தது. தஞ்சை அருகில் உள்ள தண்டாங்கோரை என்ற...

இமாச்சலப் பிரதேசம் சிம்லா மாவட்டத்தில் ஜீப் பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 13பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசம் சிம்லா மாவட்டத்தில் ஜீப் பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 13பேர் உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் ஸ்நெயில் என்னுமிடத்தில் மலைப்பாதையில் ஒரு ஜீப் பள்ளத்தில் உருண்டு விழுந்தது. விபத்து நேர்ந்த இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடனடியாக மீட்புப் பணியில்...

வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு 15இலட்ச ரூபாய்க்கான விபத்துக் காப்பீடு செய்திருக்க வேண்டும் - காப்பீட்டு ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையம்

வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு 15இலட்ச ரூபாய்க்கான விபத்துக் காப்பீடு செய்திருக்க வேண்டும் எனக் காப்பீட்டு ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையம் தெரிவித்துள்ளது. வாகன விபத்து இழப்பீடு தொடர்பான வழக்கில், விபத்துக் காப்பீட்டை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 15இலட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் எனக்...

ஆப்கானிஸ்தானில் பேருந்தும், டிரக்கும் மோதி விபத்து - 15 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் பேருந்தும், டிரக்கும் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஃபாரா மாகாணத்தில் உள்ள பக்வா மாவட்டத்தில் இருந்து காந்தஹார் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று டிரக்குடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம்...

அவுரங்காபாத்தில், குளிர்பதன ஆலையில் பெரும் தீ விபத்து

மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தில், குளிர்பதன ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அவுரங்காபாத்தின் சிக்கல்தானா என்ற இடத்தில் உள்ள ஆலையில் இச்சம்பவம் நேரிட்டது. தகவலறிந்து, 15 தீயணைப்பு வாகனங்களில், நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள்...

டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயம் அடைந்தனர். சென்னையில் இருந்து மதுரை நோக்கி டீசல் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. லாரியை கரூரைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் ஓட்டி வந்தார்....

அரசுப் பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

மதுரை அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அரசுப்பேருந்தில் மோதி விபத்துக்குள்ளான பதைபதைப்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. வாடிப்பட்டியிலிருந்து சோழவந்தான் சென்ற அந்தப் பேருந்து, மேலக்கால் பிரிவு என்ற முச்சந்தியை கடந்தது. அப்போது செக்கானூரணியில் இருந்து அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம்...

லாரியின் பின்புறம் கார் மோதி விபத்து - போலீசார் விசாரணை

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதிய விபத்தை படம்பிடிக்கச் சென்ற செய்தியாளரை லாரி உரிமையாளர் ஆபாசமாக பேசி தாக்க முற்பட்டார். நுங்கம்பாக்கம் காலேஜ் ரோடு பகுதியில் கல்லூரி மாணவர்கள் ஓட்டிவந்த காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து...

பக்ரி மார்க்கெட்டில் நேரிட்ட தீ விபத்தில், ரூ. 80 கோடி மதிப்பிலான பொருள்கள் கருகியதாக கணக்கீடு

கொல்கத்தாவில் பக்ரி மார்க்கெட்டில் நேரிட்ட தீ விபத்தில், 80 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து போனது கணக்கிடப்பட்டுள்ளது. பக்ரி மார்க்கெட்டில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் சனிக்கிழமை நள்ளிரவு தீப்பற்றியது. இதை அணைக்கும் பணிகள் 2 வது நாளாக நடந்து வருகின்றன....

சமூகவலைத்தள பயன்பாட்டால் விமானியின் தூக்கம் கெட்டதே, 2013ஆம் ஆண்டில் நேர்ந்த விபத்திற்கு காரணம் - விமானப் படை தளபதி

இரவிலும் சமூகவலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு விமானியின் தூக்கம் கெட்டதே, இந்திய விமானப் படையின் ஜெட் விமானம் 2013ஆம் ஆண்டில் விபத்தில் சிக்கியதற்கு காரணம் என்று விமானப் படை தளபதி பி.எஸ்.தனோவா கூறியுள்ளார். பெங்களூரில், Indian Society of Aerospace Medicine கருத்தரங்கில்...