​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலகளவில் தலா 1 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள 4 நிறுவனங்கள்..

பன்னாட்டளவில், நான்கு நிறுவனங்கள், தலா ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பை கொண்டவையாக மாறியிருக்கின்றன. இவற்றில், மூன்று நிறுவனங்கள், அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும். அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், பில்கேட்சின் மைக்ரோசாப்ட் நிறுவனம், சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனமான அராம்கோ, மற்றும் கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பாபெட்...

காஷ்மீர் விவகாரம்: 3ஆவது முறையாக தோல்வியைத் தழுவிய பாகிஸ்தானின் முயற்சி

சீனாவின் உதவியுடன் ஐ.நா. பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பும் பாகிஸ்தானின் முயற்சி மீண்டும் ஒருமுறை தோல்வியைத் தழுவியது. கடந்த மாதத்தில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சீனா மூலம் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப பாகிஸ்தான் முயற்சி செய்தது. 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது...

விளையாட்டு அரங்கின் கண்ணாடிகளை உடைத்தெறிந்த சூறைக்காற்று

அமெரிக்காவில் உள்விளையாட்டு அரங்கம் ஒன்றின் கண்ணாடி கதவுகளை உடைத்துக்கொண்டு புயல் வீசியதால் மாணவர்கள் சிதறி ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வடக்கு கரோலினா மாநிலத்தின் கிளிண்டன் நகரில் கடந்த திங்கள் கிழமை மணிக்கு 136 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது.....

பதவியிலிருந்து நீக்க கோரும் தீர்மானம்.. டிரம்புக்கு நெருங்கும் நெருக்கடி..!

அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்பை பதவியிலிருந்து நீக்க கோரும் தீர்மானம், செனட் அவைக்கு அனுப்பப்படுகிறது. அங்கு அவருக்கு எதிரான விசாரணை வருகிற 21ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழாண்டில், அதிபர் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் டிரம்ப், தன்னை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பிடேனை,...

முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம்.. அமெரிக்கா-சீனா உடன்பாடு..!

அமெரிக்கா - சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வந்திருக்கிறது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இறக்குமதி வரி விதிப்பில் ஏற்பட்ட மோதலால், சுமார் 2...

உயிருள்ள மைக்ரோ ரோபாட்டை உருவாக்கி விஞ்ஞானிகள் அசத்தல்

உலகின் முதலாவது உயிருள்ள ரோபாட்டை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். செனோபோட் (xenobot) என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறு ரோபாட், தவளையின் கருவுற்ற முட்டையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. தவளையின் இரண்டு விதமான செல்களை இணைத்து அவை இயங்கும் வகையிலான வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இவை...

போயிங் நிறுவனத்திற்கு புதிய CEO பொறுப்பேற்பு

போயிங் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக டேவிட் கால்ஹவுன் (David Calhoun) பொறுப்பேற்றுக் கொண்டார். 2018 மற்றும் 2019 துவக்கத்தில் நிகழ்ந்த 2 பெரும் விமான விபத்துகளில் 346 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பல விமான நிறுவனங்கள், போயிங் 737 மேக்ஸ்...

அமெரிக்க போர்க்கப்பலை விரட்டிச் சென்ற ரஷ்ய போர்க்கப்பல்

ரஷ்யப் போர்க்கப்பல் ஒன்று அமெரிக்க போர்க் கப்பலை விரட்டிச் சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. வடக்கு அரபிக்கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் 5வது படைப்பிரிவைச் சேர்ந்த யுஎஸ்எஸ் ஃபராகுட் என்ற போர்க் கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அதே பகுதியில் ரஷ்யாவுக்குச் சொந்தமான...

சிங்கப்பூருக்கு 12 போர் விமானங்களை விற்பனை செய்கிறது அமெரிக்கா

2.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள 12 எப் -35பி போர் விமானங்களை சிங்கப்பூருக்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில், குறுகிய ஓடுபாதையில் புறப்படுவதும், செங்குத்தாக தரையிறங்கக் கூடியதுமான பன்னிரண்டு எஃப்...

ஈரான் மீது போர் தொடுக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்காது

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் நிலை வந்தால் போர் தீர்மானத்திற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கப்படும் என்று சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) தெரிவித்திருக்கிறார். தற்போதைய சூழலில் பதற்றத்தை தணித்து, அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எந்த திட்டமும்...