​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ள இளவரசர் வில்லியம்ஸ் - கேத் தம்பதி

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சும், அவரது மனைவி கேத் மிடில்டனும் பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளனர். இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து கடந்த 2006-ம் ஆண்டு சார்லஸ்-கமிலா பார்க்கர் தம்பதி வந்து சென்றதை அடுத்து வில்லியம்ஸ்-கேத் தம்பதி தான் பாகிஸ்தானுக்கு முதன் முறையாக வருகை தந்துள்ளனர். இருவரையும், பாகிஸ்தான்...

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்களிடையே பீதி

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அந்நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து 157 கி.மீ தொலைவில் உள்ள இந்துகுஷ் பகுதியை மையமாகக்கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.8 அலகுகளாக பதிவான நிலநடுக்கத்தால் வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துவாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதேபோல பெஷாவர்,...

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்

லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்களின் தலைவர்களை கைது செய்திருப்பதாக பாகிஸ்தான் கூறி வரும் நிலையில், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு தண்டனை வழங்கும்படி அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பாரீசில் சர்வதேச நிதி நடவடிக்கைக் குழுவான FATF கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், பாகிஸ்தான்...

ஈரான்-சவுதி நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் பாக்., பிரதமர் இம்ரான் கான் ?

ஈரான் செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பதற்றமான சூழல் நிலவும் ஈரான்-சவுதி நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் சவுதியின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது டிரோன் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஏமன் நாட்டின்...

வேகமான இணைய சேவையை பயன்படுத்தும் நாடுகளின் தரவரிசை பட்டியல்

வேகமான இணைய சேவையை பயன்படுத்துவதில் பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 13 ஆசிய நாடுகள், இந்தியாவை விட முன்னணியில் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.   “ஸ்பீடு டெஸ்ட் குளோபல் இண்டெக்ஸ்” எனும் தலைப்பில் ஊக்லா நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவில் இந்த தகவல்கள்...

4 தீவிரவாத இயக்கத் தலைவர்களை கைது செய்த பாகிஸ்தான் அரசு

சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATF கூட்டம் பாரீசில் நாளை முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், தீவிரவாத இயக்கத் தலைவர்கள் 4 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பாகிஸ்தானை பிளாக் அவுட்...

பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய பகுதிக்குள் டிரோன் பறந்ததால் பதற்றம்

பாகிஸ்தான் பகுதியிலிருந்து, இந்திய எல்லைக்குள், தொடர்ந்து மூன்றாவது நாளாக, டிரோன் பறந்துள்ளதை, எல்லைப் பாதுகாப்பு படை உறுதி செய்திருக்கிறது. பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகே, இருநாடுகளுக்கு இடையே ஹூசைனிவாலா எல்லைப்பகுதி அமைந்திருக்கிறது. இதையொட்டியுள்ள கிராமம் மற்றும் விவசாய நிலங்களுக்கு உட்பட்ட பகுதியில், மூன்றாவது...

"பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவுக்கு விரைவில் ரயில்" கிண்டலடித்த சமூகவலைதள வாசிகள்

அல்லா விரும்பினால் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவுக்கு விரைவில் ரயில் இயக்குவோம் என அந்நாட்டு ரயில்வேத் துறை அமைச்சர் சேக் ரஷித் அகமத் தெரிவித்துள்ளார். அண்மையில் பாகிஸ்தானின் தலைநகர் கராச்சியில் இருந்து புறப்பட்ட ரயிலில் பொறுத்தப்பட்டிருந்த வழிகாட்டும் எல்.இ.டி பலகையில் சேரும் இடம் லாஸ்...

பாகிஸ்தான் எல்லையில் 1000க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் முகாம் - உளவுத்துறை எச்சரிக்கை

மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவை பயன்படுத்தி, இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் எல்லை பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், பதுங்கியிருப்பதாக, உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற பாலக்கோட் பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிப்பு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியனவற்றால்,...

கதுவா அருகே ஹிராநகரில் தொடரும் பாகிஸ்தானின் அத்துமீறல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா அருகே பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தொடர்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கதுவா மாவட்டம் ஹிராநகரில் கடந்த 15 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் எல்லைக்கு அப்பாலிருந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றிரவு 10.30 மணி அளவில் துப்பாக்கிகள்...