​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ சேவைகள் -மோடி ஆப் மூலம் பிரதமர் உரை

மோடி ஆப் மூலம் மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஏழை, எளிய மக்கள் நோயினால் பாதிக்கப்படும் போது, அவர்களது பொருளாதாரச் சுமை மேலும் அதிகரிப்பதாக தெரிவித்தார். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் இத்தகைய துயரங்களைக் களைய மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து...

முதலமைச்சர் பழனிசாமி ஜூன்15ல் டெல்லி பயணம்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 15ஆம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் வரும் 16ஆம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,...

2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி வழங்குவதே நோக்கம் - மோடி

2022 ம் ஆண்டு இந்தியாவின் 75 வது சுதந்திரதினத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். மத்திய அரசின் வீட்டு வசதித் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி...

மத்திய அரசின் திட்டங்கள் மக்களை அடைய ஆளுநர்கள் உதவ வேண்டும் - பிரதமர் மோடி

மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய மாநில ஆளுநர்கள் உதவ வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் ஆளுநர்கள் மாநாட்டில் பேசிய அவர் இதனை கூறினார். பழங்குடிகள் அதிகம் வாழும் மாநில ஆளுநர்கள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள...

5 நாட்கள் 3 நாடுகள் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி

இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி நாடு திரும்பினார்.  சுற்றுப்பயணத்தில் அவர், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த செவ்வாய் அன்று 5 நாள் பயணமாக பிரதமர் மோடி...

மலேசியா பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமான மாற்றங்கள் முன்னெடுக்கப்படுவதால், புதிய இந்தியா உருவெடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  தெற்காசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி பயணத்தின் மூன்றாவது நாளில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் சென்றடைந்தார். மலேசிய...

கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகையை நிறுத்த கூடாது - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை நிறுத்தக் கூடாது என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார்...

இந்தோனேசியா தலைநகர் ஜகர்தா சென்றடைந்தார் பிரதமர் மோடி

3 நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, இந்தோனேசிய தலைநகர் ஜகர்தா சென்றடைந்தார். இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி 5 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். தென்கிழக்கு ஆசிய மண்டலத்தில் உள்ள நாடுகளுடன் தனது நட்புறவை இந்தியா...

முத்ரா திட்டத்தின் கீழ் 12 கோடி பேர் பயன்பெற்றிருப்பதாக பிரதமர் மோடி தகவல்

தொழில்முனைவோருக்கான முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும், 12 கோடி பேர் பயன்பெற்றிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சிறு, குறு தொழில்களுக்கு 10 லட்ச ரூபாய் வரை கடனுதவி வழங்கும் பிரதம மந்திரி முத்ரா யோஜனா...

விஜய் மல்லயாவுக்காக சிறைகளின் நிலையை கேட்பது முறையல்ல, இங்கிலாந்து பிரதமரிடம் மோடி தெரிவித்ததாக சுஷ்மா சுவராஜ் தகவல்

இந்திய சிறைகளின் வசதி குறித்து விஜய் மல்லயாவுக்காக கேள்வி எழுப்புவது முறையல்ல என இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவிடம்  பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளித்த சுஷ்மாசுவராஜ், இங்கிலாந்து...