​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் பதில்

மக்களவையில் நடைபெற்ற விவாத த்திற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, மக்களின் நம்பிக்கையை பெற்ற ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா...

மக்களவையில் ராகுல் காந்தி கண்ணடித்த நிகழ்வின் காட்சிப்பதிவு சமூகவலைதளங்களில் வைரல்

நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பங்கேற்று பேசிய பின்னர், பிரதமர் மோடியை கட்டியணைத்த ராகுல் காந்தி, தனது இருக்கையில் அமர்ந்த பின்னர், இடதுபுறமாக திரும்பி கண்ணடித்த காட்சிப்பதிவு வைரலாகிறது. மத்திய பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. இதில்...

14,500 கிராமங்களுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது, இருட்டில் தவித்த கிழக்கு மாநில கிராமங்கள் ஒளிபெற்றுள்ளன: பிரதமர் மோடி

இருட்டில் கிடந்த கிழக்கு மாநிலங்களின் 14 ஆயிரத்து 500 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சவுபாக்கியா எனப்படும் அனைவருக்கும் மின்சாரம் திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி, காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது, கிழக்கு மாநிலங்களில் 18 ஆயிரம்...

நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும் - பிரதமர் மோடி

நாடாளுமன்ற அலுவல்கள் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த்குமார்,  நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற அரசுக்கு...

உலகக் கோப்பையை வென்றதால் பிரான்சில் வெற்றிக் கொண்டாட்டம்

பிரான்ஸ் உலகக் கோப்பையை வென்றதை, அந்நாட்டு மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் அந்த அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகக் கோப்பையை பிரான்ஸ் அணி வென்றதும், அந்நாட்டில் கொண்டாட்டங்கள் களைகட்டின. வீதிகளில்...

கரும்பு விலை உயர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - பிரதமர் மோடி

நடப்பு நிதியாண்டிற்கான, கரும்பு விலை உயர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள தனது அலுவலக வளாகத்தில், உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலிருந்து வந்திருந்த 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து...

வாஜ்பாயின் உடல்நிலை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து விசாரிப்பு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நேரில் கேட்டறிந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 11ஆம் தேதி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு...

கேரளாவை பிரதமர் மோடி தொடர்ந்து புறக்கணிக்கிறார் : பினராயி விஜயன்

பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவையும், அதன் கோரிக்கைகளையும் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக, முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார். கேரளாவில் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, டெல்லியில்...

மோடியைச் சந்தித்துப் பேச கேரள முதலமைச்சருக்கு 4வது முறையாக நேரம் ஒதுக்க மறுப்பு

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு 4வது முறையாக நேரம் ஒதுக்க மறுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்துக்குப் பொதுவழங்கல் திட்டத்துக்குக் கூடுதல் உணவுப்பொருட்கள் வழங்கக் கோரி முதலமைச்சர் பினராயி விஜயன் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர...

மோடியின் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்களில் விரைவான வளர்ச்சி என அமித் ஷா பேச்சு

நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களிக்கும் வகையில் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியடைந்து வருவதாக பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அசாமின் கௌகாத்தியில் பேசிய அவர், நாடு விடுதலையடைந்த காலக்கட்டத்தில் வடகிழக்கு மாநிலங்கள் அதிக வளர்ச்சி விகிதம் கொண்டிருந்ததாகவும், அதன்பின் காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி விகிதம்...